பழங்குடி மக்களின் வேளாண்மைக்கான சிறந்த பங்களிப்பு -ராஜலெட்சுமி
வால்பாறை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ஒரு பழங்குடி சமூகம் காடர் சமூகம். அங்கு மொத்தம் 25 குடும்பங்கள் வாழ்கிறது… மிளகு, இஞ்சி போன்றவற்றை பயிரிடுவதோடு காடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பொருட்களையும் வால்பாறையில் விற்பனை செய்து வந்தனர். 2019 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் இந்த 25 குடும்பங்கள் வாழ்ந்த மொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. புதியதாக இடம் கொடுக்க வனத்துறை சட்டம் வழிவகை செய்யாத போது அறவழியில் மக்களை ஒன்று திரட்டி போராடி, அரசாங்கத்துடன் இணைந்து 12 ஏக்கர் பரப்பளவில் புதிய கிராமத்தை உருவாக்கி கொடுத்தவர் காடர் சமூகத்தை சார்ந்த படிப்பறிவற்ற ராஜலட்சுமி என்ற 35 வயதுப் பெண்… இவருக்கு கையெழுத்து போடத் தெரியும் அவ்வளவுதான். புதியதாக உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு அம் மக்களை கொண்டே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தியதோடு செங்கல்,...