உழவர் விருதுகள் – 2023 – திருமிகு. வானகம் ரமேஷ் – சிறந்த வேளாண் பங்களிப்பு
திருமிகு. வானகம் ரமேஷ் - சிறந்த வேளாண் பங்களிப்புயில் சிறந்த பங்களிப்பு தமிழ்நாட்டின் மத்தியில் இயற்கை வேளாண் சார்ந்த பயிற்சிகளுக்காகவும் பரிசோதனைக்காகவும் ஒரு மாபெரும் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையின் மூலம் 2009 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் கடவூரில் உருவாக்கப்பட்டது வானகம்.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக, கருங்கல் பாறைகள் பொதிந்து கால்நடைகள் மேய்க்ககூட பயன்படாத கட்டுத்தரையாக கிடந்த அந்த நிலத்தை சீர்படுத்தி குளங்கள் வெட்டி, நெல், வாழை, மஞ்சள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், வெங்காயம். மரவள்ளி கிழங்கு என முப்போகம் விளையும் பூமியாகவும் பசுமை போர்த்திய வனமாகவும் காட்சியளிக்க பெரும் பங்காற்றியுள்ளவர் வானகம் ரமேஷ்.. வானகத்தின் முதல் தன்னார்வலராக தன்னை இணைத்துக் கொண்டவர் இன்று அறங்காவலர், பொருளாளர் என வானகத்தின் செயல்திட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்புகளை கவனித்து...