சரோஜா- சிறந்த பெண் விவசாயி விவசாயி என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல்லாடலாகவே தமிழகத்தில் இருந்து வருகிறது. அந்த கற்பிதத்தை மாற்றி எழுதியிருக்கிறார் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 53 வயதான சரோஜா. தான் மட்டுமின்றி தன்னைச்சுற்றியிருக்கும் விவசாயிகளையும் கைபிடித்து தூக்கி நிறுத்தியதில் தனித்துவம் பெறுகிறார் சரோஜா. அம்மா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என பல உறவுகளை புற்றுநோய் பாதித்து உயிர் பறிக்க மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளான சரோஜா, அதற்கான காரணங்களை அலசத் தொடங்கியிருக்கிறார். உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே புற்றுநோய் பரவலுக்கு முக்கியக்காரணம் என்பதை உணர்ந்து அதற்கு மாற்று குறித்து சிந்தித்த சரோஜாவுக்கு நம்மாழ்வாரின் புத்தகங்கள் தீர்வுக்கான பாதையைக் காட்டின. மகன்களோடு சென்று நம்மாழ்வாரைச் சந்தித்து நஞ்சில்லா உணவு குறித்து கற்றரிந்து வந்து சொந்த ஊரில் வேளாண்மை செய்யத் தொடங்கினார் சரோஜா. வேளாண்மை...