சிறந்த உழவர்கள் கூட்டமைப்பு – பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் பெண்கள் சங்கம்.
868
post-template-default,single,single-post,postid-868,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,no_animation_on_touch,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

சிறந்த உழவர்கள் கூட்டமைப்பு – பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் பெண்கள் சங்கம்.

சொந்த நில உரிமை மறுக்கப்பட்டவர்கள் பெண்கள், இரவு பகல் பாராமல் நிலத்தில் உழைத்தாலும் விவசாயி என்ற பெயர் ஆண்களுக்கே கிடைக்கிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் நிலமற்ற பெண்களில் நிலை சொல்லவே தேவை இல்லை.

காலம் காலமாக நிலமற்ற சமூகமாக விவசாயக் கூலிகளாக பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அப்படி ஒரு நிலையை தங்கள் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் உழைப்பின் மூலம் மாற்றியமைத்துள்ளனர் பள்ளூர் கிராமப் பெண்கள்.

பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்தில் மொத்தம் 80 பெண்கள் உள்ளனர். இவர்கள் பிரதான தொழில் கூலி வேலை மட்டுமே. இந்நிலையில் கிராமத்தில் ஆக்கிரமித்து தரிசாக இருந்த நிலத்தை TamilNadu women’s Farmers Front Right என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் கண்டறிந்து பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பெற்றுள்ளனர்.

காலம் காலமாக அடுத்தவர்கள் நிலத்தில் கூலியாக இருந்தப் பெண்களுக்கு தங்களுக்காக கிடைத்த முதல் நிலம் அதுதான். அதில் தொடக்க காலத்தில் விவசாயம் செய்ய ஏதுவான நிலமாக இல்லை. அதை தங்கள் உழைப்பின் மூலமாகவும், TamilNadu women’s Farmers Front Right அமைப்பின் உதவியுடனும் விளை நிலங்களாக மாற்றியுள்ளனர்.இன்று இம்மண்ணில் கம்பு, சோளம், உளுந்து, பச்சைப் பயிர், காராமணி போன்ற சிறுதானியங்களும் எண்ணெய் வித்துக்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

100 நாள் வேலைக்கு போக மீதி நேரத்தில் இப்பெண்கள் தங்கள் செய்ய வேண்டிய பணிகளை பிரித்துக் கொண்டு இந்நிலத்தில் கூட்டாக வேலை செய்து வருகின்றனர். இதற்காக 5 பேர் கொண்ட குழுவையும் தங்களுக்குள்ளேயே அமைத்துள்ளனர். விதை, உழவு, விற்பனை போன்ற அனைத்து பணிகளையும்
இக்குழு முடிவு செய்கிறது.

தொடர்ந்து மண்புழு உரம் மற்றும் இயற்கை சார்ந்த இடுப்பொருட்களை தயார் செய்வது அதை தங்கள் கூட்டுப் பண்ணை நிலத்தில் பயண்படுத்துவது மற்ற விவசாயிகளுக்கும் சொல்லி தருவது என தொடர்ந்து இயங்குகிறார்கள் இப்பெண்கள்.

அதோடு மட்டுமன்றி தங்களை விட சிறப்பாக செயல்படும் கூட்டு பண்ணைகளுக்கு சென்று பார்வையிட்டு அதை தங்கள் பண்ணையில் செயல்படுத்துவது, விதை திருவிழா, உணவு திருவிழா போன்றவற்றையும் செய்கிறார்கள்.

தங்கள் கூட்டுப் பண்ணையில் விளைந்த விளைப் பொருட்களை தாங்கள் விளைவித்தது என பெருமையோடு பகிர்ந்து கொள்கின்றனர் இப் பெண்கள் கூட்டமைப்பு. அதோடு மட்டுமன்றி தரமான விதைகளை தேவைப்படும் விவசாயிகளுக்கு பகிர்ந்தோ விற்பனை செய்தோ வருகின்றனர்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் பெண்கள் இணைந்து ஒரு கூட்டுப் பண்ணையை உருவாக்கி சாதித்த பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்திற்கு சிறந்த உழவர்கள் கூட்டமைப்புக்கான உழவர் விருதும் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது

No Comments

Sorry, the comment form is closed at this time.