நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பொறியியல் பட்டதாரி ஜனகன். இவர் சிறுதானியங்களின் நன்மைகளை அறிந்து அதைப் பரவலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தான் சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த பணியை விட்டு விலகி சிறுதானியங்களை தேடி பயணப்பட்டவர். இவர் இதுவரை 53 வகையான சிறுதானியங்களை சேமித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். அதில் சோளம் 23 வகை, தினை 11வகை, கேழ்வரகு 8 வகை, குதிரைவாலி 2 வகை மற்றும் சாமை 6 வகை. இவருடைய பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...