சிருஷ்டி பவுண்டேஷன் - வேளாண் சிறப்பு விருது மன வளர்ச்சி குன்றியவர்களை இந்த சமூகமும் குடும்ப அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலைதான் இப்போதும் இருக்கிறது. அப்படி புறக்கணிக்கப்படுபவர்களை அரவணைத்து தோள்கொடுக்கிறார் கார்த்திகேயன். 15 ஆண்டுகளாக மன வளர்ச்சி குன்றியோர் மத்தியில் பணியாற்றியுள்ள கார்த்திக், அவர்களின் உளவியலை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார். வேலையின்மையும் இயலாமையும் புறக்கணிப்புமே அவர்களின் கோபத்தையும் வேகத்தையும் தூண்டுகிறது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, கார்த்திக் எடுத்த முயற்சி பெரும் மாற்றத்துக்கு விதையாகியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகிலுள்ள குணமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் ஒரு வேளாண் பண்ணையையும் சிறப்புப் பள்ளியொன்றையும் உருவாக்கியுள்ளார் கார்த்திக். மனநலம் பாதிக்கப்பட்ட 50 பேரின் வாழ்க்கையை இந்த பண்ணையும் பள்ளியும் வண்ணமாக்கியிருக்கிறது. சிருஷ்டி பவுண்டேஷன் நடத்தும் இந்தச் சிறப்புப்பள்ளியில் வாழ்க்கைக்கல்வியோடு வேளாண் கல்வியும் போதிக்கப்படுகிறது. தங்கள் உணவுக்கு தேவையான...