உழவர்கள் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்பு – வெங்கடேஷ் , கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருமங்கலம், மதுரை.
51 வயதான முன்னாள் இராணுவ வீரர் வெங்கடேஷ் . இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு தமிழ்நாடு அரசு பணியில் இணைகிறார், மின்சார வாரியம், திருச்சி பெல், வருவாய்த்துறை இப்படி பல துறைகளில் பணிபுரிகிறார். 2013 ஆம் ஆண்டு மதுரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சூப்பர்வைசராக பணியில் சேர்கிறார்.. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நல்ல முறையில் இயங்கி வருகிறது… ஆனால் தென் தமிழகத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் சரிவர இயங்கவில்லை.. காரணம் விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டு வருவதில்லை, உடனடி பணத் தேவையின் பொருட்டு வியாபாரியிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொள்வது இப்படி நடைமுறைப் பிரச்சினைகள் இருந்துள்ளது.. இதை எல்லாம் சரி செய்ய 10 வருடங்களுக்கு முன்பே ஆட்டோ எடுத்துக் கொண்டு ஊர் ஊராக, கிராமம்...