5
home,paged,page-template,page-template-blog-compound,page-template-blog-compound-php,page,page-id-5,paged-3,page-paged-3,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 13.02.2025

விதை ஒன்று மண்ணில் விழுந்தால் தான் உழவுத் தொழில் என்று ஒன்று நடக்கும், அந்த விதைக்கு கூட பிறர் கையை எதிர்நோக்கும் சூழல் இன்று விவசாயிகளுக்கு ஏற்பட்டது ஏன்.? கலப்பின விதைகள் ஆக்கிரமித்து கிடக்க பாரம்பரிய விதைகள் களவு போனத ஏன் .? இப்படி பதில் கிடைக்கா கேள்விகளைக் கேட்பதை விட பாரம்பரிய விதைகளை விவசாயிகள் கையில் கொண்டு சேர்ப்போம் அதுதான் விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்றுவதற்கான வழி என 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, தமிழ் அறிஞர் வெங்கடாசலம் அவர்களால் போடப்படட விதை, இன்று கிளை விட்டு பல்கிப் பெருகி வளர்ந்து, தற்சார்பு உழவர் வாழ்வுக்கு உறுதுணையாய் உயர்ந்து நிற்கிறது காலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கத்தில் விவசாயமே பிரதான தொழில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக உள்ளூர் விதைகளுக்கான மாநாட்டை கலசபாக்கத்தில்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

மாரி யல்லது காரியமில்லை இவ்வுலகில். . அதுவும் உழுதொழிலுக்கு நீர் என்பது உடலில் ஓடும் குருதியை போல. . அதை உணர்ந்தே நம் முன்னோர்கள் வழிந்தோடி கடல் கடக்கும் நீரை, ஏரி, குளம், குட்டை , கண்மாய் என அனைத்து வழிகளிலும் சேமித்து உழவுக்கு உயிர் ஊட்டி வந்தனர். ஆனால் இன்றோ வேர்களை வெட்டிய மரமாய் நீர் வழித்தடத்தை இழந்த பல ஏரி குளங்கள் உயிரற்ற சடலாமாய் கிடக்கின்றன. நதியை பெண்னோடு ஒப்பிடுவர், மழையை பெண்ணுக்கு உவமையாக்குவர், நீருக்கும் பெண்ணுக்குமான தொடர்பு தொப்புள் கொடி உறவு, பிள்ளை பசியைக் கண்டு பொறுக்காத தாய் போல வறண்டு கிடந்த நீர்நிலைகள் கண்டு அதை மீட்டெடுக்க எண்ணி, அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து, 30 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இன்று மீண்டும் உயிர் பெற்று விவசாயம் வளம் பெற...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

வாழை குலை தள்ளிய பின் பயனற்று மண் தின்று போகும் வாழை, அப்படிப்பட்ட அந்த வாழையைக் கொண்டே பல பெண்களின் வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக் காட்டியிருக்கிறார் நாமக்கல் மோகனூரைச் சேர்ந்த தொழில் முனைவோர் சுகந்தி. திருமணம் என்ற தடையால் தன் படிப்புக் கனவை தொலைத்த பல கோடி தமிழ்ப்பெண்களுள் சுகந்தியும் ஒருவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடனே பிடிக்காத திருமணம். ஆனால் அதோடு தன் வாழ்வு முடிந்துவிட்டது என வீட்டில் முடங்கவில்லை. தன் தடைகளை தகர்த்தெறிய வேண்டும் என்றால் கல்வி மட்டுமே ஒரே தீர்வு என முடிவு செய்து படிப்பை தொடர்ந்தார். தொலை தூர கல்வி மூலம் BA முடித்து அதோடு நின்றுவிடாமல் MA பட்டமும் பெற்றார். கல்வி ஒருவருக்கு அறிவை மட்டும் கொடுப்பதில்லை அகத்தை திறந்து சமூகத்தை அக்கறையோடு பார்க்கும் மனதையும் கொடுகிறது. தன் வாழ்வில் கஷ்டங்களையும் சிரமங்களையும், பிடிக்காத...