நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பொறியியல் பட்டதாரி ஜனகன். இவர் சிறுதானியங்களின் நன்மைகளை அறிந்து அதைப் பரவலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தான் சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த பணியை விட்டு விலகி சிறுதானியங்களை தேடி பயணப்பட்டவர். இவர் இதுவரை 53 வகையான சிறுதானியங்களை சேமித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். …
நாகை மாவட்டதைச் சார்ந்த இளைஞர் அசோக்குமார் சிறந்த விவசாயக் கருவிகள் வடிவமைப்பிற்காக விருதை பெற்றார். இவர் துளு உரங்கள் தயாரிக்கும் இயந்திரம், கீரைகள் மற்றும் கடலை நடுவதற்கான இயந்திரம் போன்ற பல சிறு குறு விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை உருவாக்கியுள்ளார். அடிப்படையில் ஐ.டி.ஐ டீசல் மெக்கானிக்கல் படித்தவர் . 2011 ஆம் ஆண்டிலிருந்து தற்சார்பு விவசாயம் மேற்கொண்டு வருகிறார். …