Uzhavan Foundation
-1
archive,author,author-uzhavan-editor,author-2,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 13.02.2025

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கபடும் மாவட்டங்களில் முதலில் முந்தி இருப்பது பெரம்பலூர் மாவட்டம். அதிலும் பின்தங்கி ஒடுங்கி போன ஒரு ஒன்றியம் எப்படி இருக்கும், காணும் இடமெல்லாம் மானாவாரி காடுகளே அதிகம். முறையற்ற காலநிலையும், நவீன ரக வேளாண்மையின் செலவினங்களும் வேப்பூர் பகுதி விவசாயத்தின் முதுகெழும்பையே முறித்துப் போட்டது. அந்நிலையை மாற்ற பெரம்பலூரின் முந்தைய தலைமுறையின் விவசாயமான சிறுதானிய பயிரிடலை கையில் எடுத்து, வறுமையின் பிடியில் இருந்து பெரம்பலூர் விவசாயிகளை மீட்டுள்ளனர் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு. பெரம்பலூர் மானாவரி காடுகளில் மக்காச்சோளமும், PT ரக பருத்தியையும் பயிரிட்டு, மருந்தடித்து மருந்தடித்தே நொந்து போனவர்கள் அப்பகுதி விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு மருந்தின் அதீத விஷதன்மையால் 5 அப்பாவி விவசயிகள் உயிர் பறி போன பின்தான் விவசாயிகளுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய ஆபத்து...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 13.02.2025

விதை ஒன்று மண்ணில் விழுந்தால் தான் உழவுத் தொழில் என்று ஒன்று நடக்கும், அந்த விதைக்கு கூட பிறர் கையை எதிர்நோக்கும் சூழல் இன்று விவசாயிகளுக்கு ஏற்பட்டது ஏன்.? கலப்பின விதைகள் ஆக்கிரமித்து கிடக்க பாரம்பரிய விதைகள் களவு போனத ஏன் .? இப்படி பதில் கிடைக்கா கேள்விகளைக் கேட்பதை விட பாரம்பரிய விதைகளை விவசாயிகள் கையில் கொண்டு சேர்ப்போம் அதுதான் விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்றுவதற்கான வழி என 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, தமிழ் அறிஞர் வெங்கடாசலம் அவர்களால் போடப்படட விதை, இன்று கிளை விட்டு பல்கிப் பெருகி வளர்ந்து, தற்சார்பு உழவர் வாழ்வுக்கு உறுதுணையாய் உயர்ந்து நிற்கிறது காலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கத்தில் விவசாயமே பிரதான தொழில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக உள்ளூர் விதைகளுக்கான மாநாட்டை கலசபாக்கத்தில்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

மாரி யல்லது காரியமில்லை இவ்வுலகில். . அதுவும் உழுதொழிலுக்கு நீர் என்பது உடலில் ஓடும் குருதியை போல. . அதை உணர்ந்தே நம் முன்னோர்கள் வழிந்தோடி கடல் கடக்கும் நீரை, ஏரி, குளம், குட்டை , கண்மாய் என அனைத்து வழிகளிலும் சேமித்து உழவுக்கு உயிர் ஊட்டி வந்தனர். ஆனால் இன்றோ வேர்களை வெட்டிய மரமாய் நீர் வழித்தடத்தை இழந்த பல ஏரி குளங்கள் உயிரற்ற சடலாமாய் கிடக்கின்றன. நதியை பெண்னோடு ஒப்பிடுவர், மழையை பெண்ணுக்கு உவமையாக்குவர், நீருக்கும் பெண்ணுக்குமான தொடர்பு தொப்புள் கொடி உறவு, பிள்ளை பசியைக் கண்டு பொறுக்காத தாய் போல வறண்டு கிடந்த நீர்நிலைகள் கண்டு அதை மீட்டெடுக்க எண்ணி, அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து, 30 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இன்று மீண்டும் உயிர் பெற்று விவசாயம் வளம் பெற...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

வாழை குலை தள்ளிய பின் பயனற்று மண் தின்று போகும் வாழை, அப்படிப்பட்ட அந்த வாழையைக் கொண்டே பல பெண்களின் வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக் காட்டியிருக்கிறார் நாமக்கல் மோகனூரைச் சேர்ந்த தொழில் முனைவோர் சுகந்தி. திருமணம் என்ற தடையால் தன் படிப்புக் கனவை தொலைத்த பல கோடி தமிழ்ப்பெண்களுள் சுகந்தியும் ஒருவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடனே பிடிக்காத திருமணம். ஆனால் அதோடு தன் வாழ்வு முடிந்துவிட்டது என வீட்டில் முடங்கவில்லை. தன் தடைகளை தகர்த்தெறிய வேண்டும் என்றால் கல்வி மட்டுமே ஒரே தீர்வு என முடிவு செய்து படிப்பை தொடர்ந்தார். தொலை தூர கல்வி மூலம் BA முடித்து அதோடு நின்றுவிடாமல் MA பட்டமும் பெற்றார். கல்வி ஒருவருக்கு அறிவை மட்டும் கொடுப்பதில்லை அகத்தை திறந்து சமூகத்தை அக்கறையோடு பார்க்கும் மனதையும் கொடுகிறது. தன் வாழ்வில் கஷ்டங்களையும் சிரமங்களையும், பிடிக்காத...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

உழவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது கால்நடை வளர்ப்பு… அவர்கள் நொடிந்து ஒடிந்துவிடாத படி, தாங்கிப் பிடிக்கும் உயிருள்ள ஊன்றுகோல்கள் தான் ஆடு மாடு கோழிகள். பட்டி ஆடுகளும் பால் கறவை மாடுகளும் தான் இன்று பல உழவர் குடும்பங்களை பசியாற செய்து கொண்டுள்ளன. கால்நடைகளுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த உழவர் குடும்பமே நொடிந்து போகும். அப்படிப்பட்ட சூழலில் அலைக்கும் அபயகுரல்களுக்கு இரவு பகல் பாராமல் ஓடி வந்து மருத்துவ உதவி செய்து உழவருக்கு உறுதுணையாய் இருந்து வருபர் தான் கால்நடை மருத்துவர் விஜயகுமார். 35 வருடகால மருத்துவப்பணியில் அவர் தனது குடும்பத்தோடு செலவிட்ட நேரத்தை விட கால்நடைகளோடு செலவிட்ட நேரேமே அதிகம். காட்சிக்கு எளியவர், கடும் செல்லை தவிர்ப்பவர் , இல்லாதவருக்கு இயன்றதை செய்யும் ஈகை குணத்தவர் என அவரை 30 வருடங்கள் அருகில்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

வால்பாறை ஒட்டியுள்ள அடர்ந்த காடுகளில் வாழும் ஒரு பழங்குடி சமூகம் காடர் சமூகம். அங்கு மொத்தம் 25 குடும்பங்கள் வாழ்கிறது… மிளகு, இஞ்சி போன்றவற்றை பயிரிடுவதோடு காடுகளிலிருந்து கிடைக்கப்பெறும் பொருட்களையும் வால்பாறையில் விற்பனை செய்து வந்தனர். 2019 ஆம் ஆண்டு இயற்கை சீற்றத்தால் இந்த 25 குடும்பங்கள் வாழ்ந்த மொத்த கிராமமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. புதியதாக இடம் கொடுக்க வனத்துறை சட்டம் வழிவகை செய்யாத போது அறவழியில் மக்களை ஒன்று திரட்டி போராடி, அரசாங்கத்துடன் இணைந்து 12 ஏக்கர் பரப்பளவில் புதிய கிராமத்தை உருவாக்கி கொடுத்தவர் காடர் சமூகத்தை சார்ந்த படிப்பறிவற்ற ராஜலட்சுமி என்ற 35 வயதுப் பெண்… இவருக்கு கையெழுத்து போடத் தெரியும் அவ்வளவுதான். புதியதாக உருவாக்கப்பட்ட கிராமத்திற்கு அம் மக்களை கொண்டே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தியதோடு செங்கல்,...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

அடிப்படையில் விலங்கியல் இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர் அபர்ணா கார்த்திகேயன். கணவர் வேலையின் பொருட்டு பல ஊர்களில் தங்கியிருந்தவர் 2013 ஆம் ஆண்டு நிரந்தரமாகச் சென்னையில் குடியேறினார். சென்னை வந்தப் பிறகு, தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் சென்னையில் இருக்கும் சராசரி மக்களின் (ஆட்டோ ஓட்டுநர், பீச்சில் ரங்கராட்டினம் சுற்றுபவர், பஜ்ஜி சுடும் அம்மா) வாழ்கைகளைப் பற்றி எழுதத் துவங்கினார். இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றியும் அவர்களின் தற்கொலை பற்றியும் தொடர்ந்து எழுதிவரும் சாய்நாத் அவர்கள் எழுதிய பெண் விவசாயி பற்றிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு ரசிகையாக மின்னஞ்சல் அனுப்பினார். விவசாயிகள் என்றாலே ஆண்கள், வயதானவர்கள் தான், அவர்கள் டிராக்டர் ஓட்டுவார்கள் என்பன போன்ற பொது சிந்தனை உள்ளபோது அதை முழுக்க முழுக்க உடைத்து பெண்கள்தான் விவசாயித்தில் 90% என சாய்நாத் எழுதியது இவருக்கு விவசாயம்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

சித்ரவேல் அடிப்படையில் ஊடகவியலாளர்..புதிய தலைமுறை செய்தி சேனலில் நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பாளர்.. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதம் ஒரு பணி செய்கிறார். நீர் நிலைகள் சீரமைத்தல், மரக் கன்றுகள் நடுதல், ஊர் சுத்தம் செய்தல் இப்படி பல கட்ட பணிகளை தன்னார்வர்களையும், மாணவர்களையும் வைத்து செய்கிறார்…இதன் மூலம் நீர் நிலைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிவு கிட்டுகிறது.. பிறகு 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தன் பைக் பஞ்சர் ஆகி நிற்க, அந்த ஊரில் தன் அண்ணனின் நண்பர் ஒருவர் வந்து உதவி செய்ததோடு அவர் வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறார்.. அந்த ஊரில் நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தில் நீர் கொண்டு செல்வதை கவனிக்கிறார். காஞ்சிபுரம் பக்கம் இப்போதும் குளத்தில் நீர் எடுத்து செல்கிறார்களே இவருக்கு ஆச்சரியம்… அதைப் பற்றி...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

சொந்த நில உரிமை மறுக்கப்பட்டவர்கள் பெண்கள், இரவு பகல் பாராமல் நிலத்தில் உழைத்தாலும் விவசாயி என்ற பெயர் ஆண்களுக்கே கிடைக்கிறது. இப்படிபட்ட சூழ்நிலையில் நிலமற்ற பெண்களில் நிலை சொல்லவே தேவை இல்லை. காலம் காலமாக நிலமற்ற சமூகமாக விவசாயக் கூலிகளாக பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அப்படி ஒரு நிலையை தங்கள் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் உழைப்பின் மூலம் மாற்றியமைத்துள்ளனர் பள்ளூர் கிராமப் பெண்கள். பள்ளூர் நிலமற்ற விவசாயப் பெண்கள் சங்கத்தில் மொத்தம் 80 பெண்கள் உள்ளனர். இவர்கள் பிரதான தொழில் கூலி வேலை மட்டுமே. இந்நிலையில் கிராமத்தில் ஆக்கிரமித்து தரிசாக இருந்த நிலத்தை TamilNadu women's Farmers Front Right என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் கண்டறிந்து பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பெற்றுள்ளனர். காலம் காலமாக அடுத்தவர்கள் நிலத்தில் கூலியாக இருந்தப் பெண்களுக்கு தங்களுக்காக கிடைத்த...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024

51 வயதான முன்னாள் இராணுவ வீரர் வெங்கடேஷ் . இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு தமிழ்நாடு அரசு பணியில் இணைகிறார், மின்சார வாரியம், திருச்சி பெல், வருவாய்த்துறை இப்படி பல துறைகளில் பணிபுரிகிறார். 2013 ஆம் ஆண்டு மதுரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சூப்பர்வைசராக பணியில் சேர்கிறார்.. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நல்ல முறையில் இயங்கி வருகிறது… ஆனால் தென் தமிழகத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் சரிவர இயங்கவில்லை.. காரணம் விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டு வருவதில்லை, உடனடி பணத் தேவையின் பொருட்டு வியாபாரியிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொள்வது இப்படி நடைமுறைப் பிரச்சினைகள் இருந்துள்ளது.. இதை எல்லாம் சரி செய்ய 10 வருடங்களுக்கு முன்பே ஆட்டோ எடுத்துக் கொண்டு ஊர் ஊராக, கிராமம்...