உழவர் விருதுகள் – 2023 – திருமிகு. தினேஷ்குமார் – சிறந்த வேளாண் ஆர்வலர்.
816
post-template-default,single,single-post,postid-816,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2023 – திருமிகு. தினேஷ்குமார் – சிறந்த வேளாண் ஆர்வலர்.

இளம் தலைமுறை பொழுதுபோக்கும் சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி நம்பிக்கையை விதைக்கிறார் சிவகாசி மாவட்டம் பூவாகபுரம் என்னும் சின்ன கிராமத்தில் பிறந்த தினேஷ்குமார். வேளாண்மையை வெற்றிகரமாக செய்யும் விவசாயிகளையும் தொழில்நுட்பங்களையும் ‘நவீன உழவன்’ என்ற யூடியூப் சேனல் மூலம் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் இந்த எம்பிஏ பட்டதாரி, ஒரு தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங்
பிரிவில் வேலை செய்கிறார்.

தன் பயணங்களில் கண்டறியும் வித்தியாசமான விவசாயிகளையும் வியப்பான தொழில்நுட்பங்களையும், பொதுவெளிக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ஒரு முகநூல் பக்கத்தைத்தொடங்கியதில் தொடங்குகிறது இவரது வெற்றிப்பயணம். தன் உற்பத்தியை தானே மதிப்பூட்டி கூடுதல் லாபம் பார்க்கும் விவசாயிகள், ஒருங்கிணைந்த வேளாண்மை மூலம் பெரும் லாபம் ஈட்டும் விவசாயிகள், புதுப்புது தொழில்நுட்பங்களைக் கையாளும் விவசாயிகள், மாறுபட்ட பயிர்களை பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளென சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களின் வெற்றிக்கதைகளை பதிவு செய்யும் தினேஷ்குமாரின் முகநூல் பக்கம், வெகுவிரைவாக வளர்ந்து 7.3 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்றிருக்கிறது. எழுத்துவழி சொன்ன கதைகளை காட்சிவழி சொல்ல, தினேஷின் ‘நவீன உழவன்’ யூடியூப் சேனலை 10 லட்சம் சந்தாதார்கள் பின்தொடர்கிறார்கள்.

யூடியூப் தொடங்கினால் டாலர்களை ஈட்டலாம் என்ற கனவோடு இணையத்துக்குள் நுழையும் இளைஞர்களுக்கு மத்தியில், வேளாண்மை மீதிருந்த ஈர்ப்பாலும் ஈடுபாட்டாலும் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தினேஷ், வீடியோக்களில் எந்த வணிக சமரசங்களையும் செய்துகொள்ளாதவர் என்பது தனித்தன்மை. தன் மார்க்கெட்டிங் பணிக்கு மத்தியில்,
வீடியோக்களுக்காக எடுக்கிற முனைப்பில் இருக்கிறது, தினேஷ்குமாரின் அர்ப்பணிப்பு.

வேளாண்மை மீதிருக்கும் அவநம்பிக்கைகளை உடைத்து, ஆக்கப்பூர்வமாக அதைச் செய்துகொண்டிருக்கும் விவசாயிகளை சமூகத்திற்குக் காட்சிப்படுத்தி பலநூறு இளைஞர்கள் அதன்பக்கம் ஈர்த்தது, தினேஷின் பசுமைவெற்றி.

தமிழ்நாடு தாண்டி இந்தோனேசியா, துபாய், தாய்லாந்துக்கெல்லாம் பயணப்பட்டு அங்குள்ள தொழில்நுட்பங்களையும் சாகுபடி முறைகளையும் அறிமுகப்படுத்துகிற தினேஷ்குமாரின் ஆக்கப்பூர்வமான பணியை பாராட்டி “சிறந்த வேளாண் ஆர்வலர்” க்கான உழவர் விருதும் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

No Comments

Post A Comment