உழவர் விருதுகள் – 2022 – களஞ்சியம் விவசாயப் பெண்கள் கூட்டமைப்பு
753
post-template-default,single,single-post,postid-753,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2022 – களஞ்சியம் விவசாயப் பெண்கள் கூட்டமைப்பு

சங்கனாப்பேரி களஞ்சியம் விவசாயப் பெண்கள் கூட்டமைப்பு (தென்காசி) – -சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்பு

முற்றிலும் வேளாண்மை பொய்த்துப்போன நிலத்தின் பச்சையத்தை மீட்டு பலநூறு குடும்பங்களுக்கு நம்பிக்கையளித்திருக்கிறது களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயிருக்கும் சங்கானப்பேரி வானம் பார்த்த பூமி… ஊரைக்கடந்தோடும் ஆறொன்றில் எப்போதேனும் தண்ணீரோடும். தொடர் மணல் திருட்டால் கிணறுகளும் வற்றிப்போக கரும்பும் நெல்லும் பருத்தியும் போட்டு கைநட்டப்பட்ட விவசாயிகளை கம்பு, சோளம், கேழ்வரகு, திணை என சிறுதானியங்களின் பக்கம் திருப்பியதில் தொடங்கியது முதல் வெற்றி.

25 ஆண்டுகளுக்கு முன்பு சுய உதவிக்குழுவாக ஒருங்கிணைந்து 182 பெண்களடங்கிய விவசாயக் கூட்டமைப்பாக வளர்ந்ததன் பின்னணியில் இருக்கிறது 30 பெண்களின் அயராத உழைப்பு. ஆண்டுதோறும் விதைத்திருவிழா நடத்தி தங்களிடமிருக்கும் நாட்டுவிதைகளை அண்டையூர் விவசாயிகளுக்கும் பரிவர்த்தனை செய்வதோடு ரசாயனமற்ற வேளாண்மை குறித்து தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள் இந்த பெண்கள். இவர்கள் எடுத்த முன்முயற்சியால் வாசுதேவநல்லூரைச் சுற்றிலும் ரசாயன வாடை குறைந்து வருகிறது. விஷமற்ற தானியங்கள் விளையத் தொடங்கியிருக்கின்றன.

பசியும் பட்டினியும் சாபம் என்றிருந்த நிலையை ஒற்றுமையால் மாற்றி, நாங்களும் உலகுக்குப் படியளப்போம் என்று முன்னுதாரணமாகியிருக்கிறார்கள் இந்த வேளாண் தாய்கள். நிலமற்ற விவசாயக் கூலிகளுக்கு பயனற்றுக்கிடக்கும் நிலங்களைத் தந்தால் இன்னும் பலநூறு பேரின் பசியாற்றுவோம் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கும் இந்தப் பெண்கள் கூட்டமைப்பின் அரும்பணியைப் பாராட்டி சிறந்த விவசாயப் பெண்கள் கூட்டமைப்புக்கான உழவர் விருதும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

No Comments

Post A Comment