உழவர் விருதுகள்
-1
archive,paged,category,category-1,paged-2,category-paged-2,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

நம் அனுமன் நதி  சீரமைப்பு குழு - நீர் நிலைகளை மீட்டெடுத்தல் 30 ஆண்டுகாலம் தண்ணீரையே பார்க்காத ஒரு நதியை மீட்டு உயிர் தந்திருக்கிறது மக்களின் ஒற்றுமை. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி  32 கிலோ மீட்டர் நீளத்துக்கு 11 கிராமங்களின் உயிர் நனைத்து ஒடி  மன்னார் வளைகுடாவில் கலக்கிறது அனுமன் நதி.  இருதிசைகளிலும் 400 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் மூழ்கி சுருங்கி பொழிவிழந்து போனது இந்த நதி. மரணித்து வரும் நதியை மீட்க  ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு கரம் கோர்த்தார்கள் 11 கிராமங்களின் தன்னார்வலர்கள். கொரோனாவினால் ஊரே முடங்கிக் கிடந்த நேரத்தில் தொடங்கியது பணி. அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். சக்திநாதன் வழிகாட்ட,  மாவட்ட நிர்வாகம் தோள் கொடுக்க இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். DGPS...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

சரோஜா- சிறந்த பெண் விவசாயி விவசாயி என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல்லாடலாகவே தமிழகத்தில் இருந்து வருகிறது. அந்த கற்பிதத்தை மாற்றி எழுதியிருக்கிறார் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 53 வயதான   சரோஜா. தான் மட்டுமின்றி தன்னைச்சுற்றியிருக்கும் விவசாயிகளையும் கைபிடித்து தூக்கி நிறுத்தியதில் தனித்துவம் பெறுகிறார் சரோஜா. அம்மா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என பல உறவுகளை புற்றுநோய் பாதித்து உயிர் பறிக்க மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளான சரோஜா, அதற்கான காரணங்களை அலசத் தொடங்கியிருக்கிறார். உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே புற்றுநோய் பரவலுக்கு முக்கியக்காரணம் என்பதை உணர்ந்து  அதற்கு மாற்று குறித்து சிந்தித்த சரோஜாவுக்கு நம்மாழ்வாரின் புத்தகங்கள் தீர்வுக்கான பாதையைக் காட்டின. மகன்களோடு சென்று நம்மாழ்வாரைச் சந்தித்து நஞ்சில்லா உணவு குறித்து கற்றரிந்து வந்து சொந்த ஊரில் வேளாண்மை செய்யத் தொடங்கினார் சரோஜா. வேளாண்மை...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

சிருஷ்டி பவுண்டேஷன் - வேளாண் சிறப்பு விருது மன வளர்ச்சி குன்றியவர்களை இந்த சமூகமும் குடும்ப அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலைதான் இப்போதும் இருக்கிறது. அப்படி புறக்கணிக்கப்படுபவர்களை அரவணைத்து தோள்கொடுக்கிறார் கார்த்திகேயன். 15 ஆண்டுகளாக மன வளர்ச்சி குன்றியோர் மத்தியில் பணியாற்றியுள்ள கார்த்திக், அவர்களின் உளவியலை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார். வேலையின்மையும் இயலாமையும் புறக்கணிப்புமே அவர்களின் கோபத்தையும் வேகத்தையும் தூண்டுகிறது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, கார்த்திக் எடுத்த முயற்சி பெரும் மாற்றத்துக்கு விதையாகியிருக்கிறது.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகிலுள்ள குணமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் ஒரு வேளாண் பண்ணையையும் சிறப்புப் பள்ளியொன்றையும் உருவாக்கியுள்ளார் கார்த்திக். மனநலம் பாதிக்கப்பட்ட 50 பேரின் வாழ்க்கையை இந்த பண்ணையும் பள்ளியும் வண்ணமாக்கியிருக்கிறது. சிருஷ்டி பவுண்டேஷன் நடத்தும் இந்தச் சிறப்புப்பள்ளியில் வாழ்க்கைக்கல்வியோடு வேளாண் கல்வியும் போதிக்கப்படுகிறது. தங்கள் உணவுக்கு தேவையான...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

பரமேஸ்வரன்- பாரம்பரிய விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கம் காரமடை வரி கத்தரி, குளத்தூர் வெள்ளை கத்தரி, எலவம்பாடி முள் கத்தரி என கத்தரியில் மட்டும் நம்மிடம் 500க்கும் மேற்பட்ட நாட்டுரகங்கள் இருந்துள்ளன. எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கம்பெனி விதைகளை வாங்கி பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த அவல நிலையை மாற்றி மீண்டும் நம் பாரம்பரிய விதைகளை பரவலாக்குவதற்காக இந்தியா முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள  ஐ.வாடிபட்டியைச் சேர்ந்த  பரமேஸ்வரன் கடந்த ஆறு வருட உழைப்பில் காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், மரங்கள் என  300க்கும் மேற்பட்ட  அரிய மரபு விதைகளைச் சேகரித்து பரவலாக்கியுள்ளார். நண்பரொருவர் பாரம்பரிய விதைகள் பற்றிய ஆர்வத்தைத்தூண்ட ஊர் ஊராக அலைந்து திரிந்த பரமேஸ்வரனுக்கு, சந்திரசேகரன் என்ற மூத்த விவசாயி 20 விதமான பாரம்பரிய விதைகளை அள்ளித்தந்திருக்கிறார். அதன்பிறகு, அதுவே பரமேஸ்வரனின் வாழ்க்கையாகிப்போனது....

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

நம் சந்தை - சிறந்த வேளாண் கூட்டுறவு பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோத்தகிரி சண்முகநாதன்  உருவாக்கியுள்ள நம்ம ஊரு சந்தை தேசத்துக்கே முன்னுதாரணமாகியிருக்கிறது. மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து இருளர்கள் சேகரித்துவரும் தேனையும், இரவு பகல் பாராமல் குறும்பர்கள் வரைந்துதரும் ஓவியங்களையும் மலிவாக வாங்கி கொள்ளை விலைக்கு விற்று பணம் பார்த்தார்கள் பலர். இதைக்கண்டு வருந்திய  சண்முகநாதன் இரண்டாண்டுகள் அந்த மக்களோடு பழகி அவர்கள் சேகரித்துத்தரும் பொருள்களின் மகத்துவத்தை உணர வைத்தார். அந்த மக்களே விலைவைத்து விற்கும் வகையில் 'நம்ம ஊரு சந்தை' என்ற சொசைட்டியை உருவாக்கினார்.  குறும்பர், கோத்தர், இருளர், ஆதிதிராவிடர்கள் மற்றும் நில உடமை மறுக்கப்பட்ட தாயகம் திரும்பியவர்கள் நம்ம ஊரு சந்தையின் அங்கத்தினராக்கப்பட்டார்கள். இசைக்கருவிகள், ஓவியங்களென உற்பத்திக்கும் விற்பனைக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து வரையறுக்கப்பட்ட நிறுவனம் போல செயல்படுகிறது...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2022 / 11.03.2022

சங்கனாப்பேரி களஞ்சியம் விவசாயப் பெண்கள் கூட்டமைப்பு (தென்காசி) - -சிறந்த பெண் விவசாயிகள் கூட்டமைப்பு முற்றிலும் வேளாண்மை பொய்த்துப்போன நிலத்தின் பச்சையத்தை மீட்டு பலநூறு குடும்பங்களுக்கு நம்பிக்கையளித்திருக்கிறது களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயிருக்கும் சங்கானப்பேரி வானம் பார்த்த பூமி...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 06.08.2020

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கடந்த பத்தாண்டுகளுகாக எந்த வித இராசயன பயன்பாடுமின்றி விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதோடு அவைகளை மதிப்புகூட்டி சமூக வலைத்தளங்களின் வழியாக யாருடைய உதவியிமின்றி விற்பனையும் செய்து வருகிறார். இவருடைய நேரடி விற்பனை முறையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பொறியியல் பட்டதாரி ஜனகன். இவர் சிறுதானியங்களின் நன்மைகளை அறிந்து அதைப் பரவலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தான் சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த பணியை விட்டு விலகி சிறுதானியங்களை தேடி பயணப்பட்டவர். இவர் இதுவரை 53 வகையான சிறுதானியங்களை சேமித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். அதில் சோளம் 23 வகை, தினை 11வகை, கேழ்வரகு 8 வகை, குதிரைவாலி 2 வகை மற்றும் சாமை 6 வகை. இவருடைய பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 55 வயதான மனோன்மணி, 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். தனி ஒருவராக இராசயன பயன்பாடின்றி விவசாயம் செய்ததோடு 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்சார்பு வேளாண்மை நோக்கி வரவழைத்துள்ளார். தற்சார்பு வேளாண்மைக்காக இவர் செய்யும் பங்களிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00, 000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாகப்பட்டின மாவட்டம் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்தவர் ஞானவள்ளி. விவசாயக் கூலிகளான இவரும் இவரது கணவரும் இணைந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாட கடன் பிரச்சனை வாட்ட இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். தங்களை விவசாயம் கைவிட்டதே என்று நினைக்காமல் அதே விவசாயத்தில் தன் மக்களை படிக்க வைக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.. இவருடைய நம்பிக்கையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலைய வழங்கப்பட்டது. ...