நீர் நிலைகள் சீரமைத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்பு – சித்ரவேல்….
871
post-template-default,single,single-post,postid-871,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

நீர் நிலைகள் சீரமைத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்பு – சித்ரவேல்….

சித்ரவேல் அடிப்படையில் ஊடகவியலாளர்..புதிய தலைமுறை செய்தி சேனலில் நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பாளர்.. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதம் ஒரு பணி செய்கிறார். நீர் நிலைகள் சீரமைத்தல், மரக் கன்றுகள் நடுதல், ஊர் சுத்தம் செய்தல் இப்படி பல கட்ட பணிகளை தன்னார்வர்களையும், மாணவர்களையும் வைத்து செய்கிறார்…இதன் மூலம் நீர் நிலைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிவு கிட்டுகிறது..

பிறகு 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தன் பைக் பஞ்சர் ஆகி நிற்க, அந்த ஊரில் தன் அண்ணனின் நண்பர் ஒருவர் வந்து உதவி செய்ததோடு அவர் வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறார்.. அந்த ஊரில் நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தில் நீர் கொண்டு செல்வதை கவனிக்கிறார். காஞ்சிபுரம் பக்கம்
இப்போதும் குளத்தில் நீர் எடுத்து செல்கிறார்களே இவருக்கு ஆச்சரியம்… அதைப் பற்றி நண்பரிடம் விசாரிக்கும் போது, அது பல வருடங்களாக தூர் வாரப்படாமலும், நீர் கருப்பு நிறத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கிறார்..

அதோடு இதற்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் எனச் அவர் சொல்ல இதை சித்ரவேல் தான் பணிபுரியும் சேனலில் செய்தியாக்கியதோடு தன் தொடர்புகள் மூலம் இதை அனைத்து மட்டங்களிலும் கொண்டு சேர்க்கிறார்..

அதோடு மட்டுமன்றி இதற்காக தனியா ஒரு குழு அமைத்து அதை சமூக வலைத்தளங்களில் எழுதி பேசு பொருளாக்கி, மக்களின் பங்களிப்பு மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அந்த குளத்தை தூர்வார்கிறார்கள். இதுதான் அவர் தனியாக வேலை செய்த முதல் குளம்… இந்த பணிக்கு முன்பு வரை நீர் நிலைகள் என்பது ஏரி, ஆறு, விவசாயப் பயன்பாடு என்று நினைத்திருந்தவருக்கு குடி தண்ணிருக்கும் குளங்கள் பயன்படுகிறது. அதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும், சீரமைப்பு செய்ய வேண்டும்… இதுப்போல இருக்கும் நீர் நிலைகளை மக்களுக்கு அடையாளப் படுத்தி ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

இதுப்போல நீர் நிலைகளுக்காக அவர் வேலை செய்ய முடிவெடுத்த போது திருவண்ணாமலையில் நீர் நிலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் இதை செய்தியாக்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை வருகிறது.. அதை காணச் சென்றவருக்கு அங்கு ஒரு பெரிய கால்வாய் எந்தப் பயனும் இல்லாமல்
இருந்துள்ளது… அதைப் பற்றி பெரியதாக விவசாயிகளுக்கு எதுவும் தெரியவில்லை. அதே சமயம் மழை பெய்யும் நாட்களில் ஊர்களில் வெள்ளம் வந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருப்பதாககவும் தெரிவிக்கிறார்கள்..

இதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்த சித்ர வேல், நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த நீர் சார்ந்த வல்லுநர்களை அழைத்துக் கொண்டு அந்த ஊருக்கே செல்கிறார் … அங்கே வல்லுநர் குழு பார்வையிட, அரசுத் தரப்பிலும் பொறியாளர் ஒருவர் வர உடனே இங்கே நந்தன் கால்வாய் சீரமைப்பு குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்..

இந்த குழுவோட முகநூல் பக்கத்திலும், வாட்சப்பிலும் தன்னார்வலர்களை இணைத்ததோடு இதை செய்தியாவும் கொண்டு வந்துள்ளார்.. அதோடு மட்டுமன்றி அத்த ஊர் சட்ட மன்ற, நாடாளுமன்ற
உறுப்பினர்கள், அதிகாரிகள், என எல்லா மட்டத்திலும் இந்த நந்தன் கால்வாயை சீரமைப்பதற்கான கோரிக்கையை வைத்துள்ளார்..

அதே நேரத்தில் அங்கு ஊரில் உருவாக்ப்பட்ட குழுவும் அதிகாரிகளை பார்த்து பேசுவது அடுத்த கட்ட நடவடிக்கை என இறங்க, இதற்கு தன் ஊடகவியலாளர் பணி மூலம் அனைத்து சேனல்களிலும் செய்தியாக்க தொடர்ந்து இது ஒரு பேசுப் பொருளாக மாறியுள்ளது…தொடர்ந்து பேசுப் பொருளாக, மக்களும் தங்கள் ஒத்துழைப்பை தர சித்ரவேல் அனைவரையும் ஒருங்கிணைக்க 50 வருடங்களாக நீரே பார்க்காத 36 கிலோ மீட்டருக்கு இரண்டு மாவட்டங்களுக்கு செல்லும் நந்தன் கால்வாய் சீரமைத்து அதில் தண்ணீர் வர வைத்து பெரும் சாதனைக்கு துணை நின்றிருக்கிறார்…

இதைப் பற்றி அவர் சொல்லும்போது இதில் 11 கிலோ மீட்டர் பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்ட கால்வாய் என்கிறார்கள்… இதில் தண்ணீர் பள்ளத்திலிருந்து மேட்டை நோக்கிச் செல்லுமாறு எல்லாம் உள்ளது.. இப்படி ஒரு கால்வாயை மீட்டெடுத்து அதை மாணவர்களுக்கு சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது என்கிறார்..

இப்போது இவருடைய ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்ட நந்தன் கால்வாய் குழுவைச் சேர்ந்த அந்த ஊர் மக்களே பராமரிப்பு செய்து கொள்கின்றனர்.. தற்போது இரண்டு வருடங்களாக தண்ணீர் வந்து
கொண்டிருக்கிறது..

இந்த கால்வாய் சீரமைத்ததின் மூலம் 20 கிராமங்களுக்கு மேல் மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என்றால் அதற்கு சித்தரவேலின் பங்களிப்பு பெரும் காரணம்…

அதோடு தஞ்சாவூர் பக்கம் தங்கள் குளத்திற்கு வாய்க்கால் இல்லை நீர் வருவதில்லை என இவரிடம் மக்கள் சொல்ல அதை காணச் சென்றவர் அந்த ஊர் மக்களையே ஒருங்கிணைத்து எத்தவிதமான உபகரணங்களும் இல்லாமல் மக்கள் பங்களிப்போடு இரண்டு கிலோ மீட்டருக்கு வாய்க்கால் வெட்டி இதை செய்தியாக்கியதோடு செய்தி சேனல்கள் மற்றும் அதிகாரிகளிடம் கொண்டு செல்ல 2 கிலோ மீட்டர் வெட்டப்பட்ட கால்வாய் 100 கிலோ மீட்டர் அரசு மற்றும் மக்களின் பங்களிப்புடன் வெட்டப்பட்டதற்கு சித்ரவேலின் ஒருங்கிணைப்பு பெரும் காரணமாக இருந்திருக்கிறது..

தற்போது சுதந்திர ஊடகவியலாளராக இயங்கும் சித்திரவேல் மாற்று ஊடக மையம் என்ற அமைப்பை நிறுவி பல ஏரி குளங்களை சீரமைத்து வருகிறார்… ஏரி, குளம், குட்டை, ஊரணி போன்ற 300 க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை சீரமைக்க பெரும் பங்காற்றியுள்ளார் ஊடகவியலாளர் சித்ரவேல்.

இதோடு மட்டுமன்றி தொடர்ந்து நீர் நிலைகளை சார்ந்து மக்களை ஒருங்கிணைப்பு செய்வது, தன்னார்வர்களை திரட்டுவது, அரசு மற்றும் அதிகாரிகளிடம் பேசுவது அந்த ஊர் மக்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குவது என தொடர்ந்து நீர் நிலைகள் மேம்பாட்டிற்காக இயங்கு வருகிறார், சமூக அக்கறை கொண்ட ஊடகவியலாளர் சித்ரவேல்.

நீர் நிலைகளை மேம்படுத்த இவர் கொடுக்கும் பெரிய உழைப்பை பாராட்டு வகையிலும் நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்பக்கான உழவர் விருதும் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.