மயிலாடுதுறையைச் சார்ந்த விவசாயி சேதுராமன் அவர்கள் அரசாங்கப் பணியை துறந்துவிட்டு தற்சார்பு விவசாயம் செய்து வருபவர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரோடு இணைந்து பல களப்பணிகளை செய்தவர். முதல் இயற்கை வேளாண் மாநாட்டை ஒருங்கிணைத்தவர். இவர் 25 வருடங்களுக்கும் மேலாக விவசாயத்திற்கு ஆற்றியப் பங்களிப்பை பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. ...