அசோக்குமார்
-1
archive,paged,tag,tag-25,paged-2,tag-paged-2,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 06.08.2020

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கடந்த பத்தாண்டுகளுகாக எந்த வித இராசயன பயன்பாடுமின்றி விளைப்பொருட்களை உற்பத்தி செய்வதோடு அவைகளை மதிப்புகூட்டி சமூக வலைத்தளங்களின் வழியாக யாருடைய உதவியிமின்றி விற்பனையும் செய்து வருகிறார். இவருடைய நேரடி விற்பனை முறையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பொறியியல் பட்டதாரி ஜனகன். இவர் சிறுதானியங்களின் நன்மைகளை அறிந்து அதைப் பரவலாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், தான் சென்னையில் பார்த்துக் கொண்டிருந்த பணியை விட்டு விலகி சிறுதானியங்களை தேடி பயணப்பட்டவர். இவர் இதுவரை 53 வகையான சிறுதானியங்களை சேமித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். அதில் சோளம் 23 வகை, தினை 11வகை, கேழ்வரகு 8 வகை, குதிரைவாலி 2 வகை மற்றும் சாமை 6 வகை. இவருடைய பாரம்பரிய சிறுதானிய விதைகள் சேமிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 55 வயதான மனோன்மணி, 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். தனி ஒருவராக இராசயன பயன்பாடின்றி விவசாயம் செய்ததோடு 150 க்கும் மேற்பட்ட விவசாயிகளை தற்சார்பு வேளாண்மை நோக்கி வரவழைத்துள்ளார். தற்சார்பு வேளாண்மைக்காக இவர் செய்யும் பங்களிப்பை பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 1,00, 000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

நாகப்பட்டின மாவட்டம் சீர்காழி வட்டத்தைச் சேர்ந்தவர் ஞானவள்ளி. விவசாயக் கூலிகளான இவரும் இவரது கணவரும் இணைந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாட கடன் பிரச்சனை வாட்ட இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். தங்களை விவசாயம் கைவிட்டதே என்று நினைக்காமல் அதே விவசாயத்தில் தன் மக்களை படிக்க வைக்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.. இவருடைய நம்பிக்கையைப் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலைய வழங்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே நாகர் கூடல் என்ற கிராமத்தில் மாற்றத்திற்கான பள்ளியாக புவிதம் என்ற பள்ளியை நடத்தி வருபவர் புவிதம் மீனாட்சி. இந்தப் பள்ளியில் வேளாண்மை என்பது முக்கியமான பாடம். இங்குள்ள குழந்தைகளுக்கு விவசாயத்தின் அவசியத்தை உணர்த்துவதோடு தங்கள் உணவிற்கு தேவையான பொருட்களைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள். எதிர்காலத் தலைமுறையினருக்கு வேளாண்மையின் அவசியத்தை கற்பித்துக் கொண்டிருக்கும் இவரையும் இவருடைய அறக்கட்டளையும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் விவசாயி பிரபு. சிறுவயதில் மரத்தின் மீதேறி கீழே விழுந்ததில் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை பறிபோயிற்று. ஆனால் அதைப்பற்றி கவலை கொண்டு முடங்காமல், தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கரிலும் குத்தகைக்கு எடுத்துள்ள இருபது ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார். பார்வை சவால் உள்ள நிலையிலும் விவசாயத்தை நேசித்து விவசாயம் செய்துவருபவரான இவருடையை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் பாராட்டி உழவர் விருதுகள் வழங்கும் ஊக்கத்தொகை ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஊட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் அரவிந்தன் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி விவசாயத்தை நேசித்து செய்து வருகின்றனர். கடுங்குளிர், மழை போன்றவற்றைகளைப் பொருட்படுத்தாமல் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள் . இராசயனப் பயன்பாடின்றி விளைப்பொருட்களை ஆன்லைன் வர்த்தகம் மூலமாக கிடைக்கச் செய்யும் முயற்சியில் உள்ளார்கள். இவர்களுடைய தன்னம்பிக்கையையும் விவசாயத்தின் மீது வைத்துள்ள பற்றையும் பாராட்டி இவர்கள் முயற்சியை செயல்படுத்தும் நோக்கில் இவர்களுக்கு உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையாக ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் சோலார் சீடர், சிறு தானியங்கள் உமி நீக்கும் இயந்திரம், எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுக்க சிறிய மரச்செக்கு போன்றவற்றை வடிவமைத்துள்ளார்.. இவருடைய கண்டுபிடிப்புகள் சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் சிறப்பு பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், இவருக்கு உழவர் விருதும் சிறப்பு பரிசாக ரூபாய் 25,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

ஈரோடு மாவட்டம் கொங்கு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களான கோகுல்ராஜா மற்றும் நண்பர்கள் தானியங்கி மஞ்சள் நடவு செய்யும் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த கருவியை தானியங்கியாகவும் மனித ஆற்றல் வழியாகவும் பயன்படுத்தலாம்.. சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இவர்களுடைய "தானியங்கி மஞ்சள் நடவு செய்யும் இயந்திரம்" மூன்றாம் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு உழவர் விருதும் மற்றும் ரூபாய் 25,000 த்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2020 / 03.08.2020

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை வட்டம், பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜா. 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை கண்டுபிடிப்பதில் வல்லவர். மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பம், கடலை பறிக்கும் இயந்திரம், சிறிய உழவு ஓட்டும் இயந்திரம், காட்டு விலங்குகளை விரட்டும் கருவி போன்ற பல கருவிகளை வடிவமைத்துள்ளார். சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இரண்டாம் பரிசாக இவருடைய "ஆழ்துளை கிணற்றிலிருந்து தானியங்கியாக கிணற்றில் நீர் நிரப்பும் நுட்பம்" இரண்டாம் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 25 ஆயிரத்திற்க்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...