உழவர் விருதுகள்
-1
archive,category,category-1,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

உலகில் தோன்றிய புது புது மாற்றங்கள், புதுபுது கண்டுபிடிப்புகள் , புது புது சிந்தனைகள் என அனைத்திற்குப் பின்னாலும் இருப்பது தன்னலமற்ற தனிநபர்களின் உழைப்பு மட்டுமே. . அந்த வரிசையில் 35 ஆண்டுகளாக தன் வாழ்வையே உழவுக்காக அற்பணித்தவர் தான் மதுரையை சேர்ந்த “பாமயன் என்கின்ற பாலசுப்பிரமணியன் . . . முதுநிலை படிப்பு முடித்து பத்திரிகை துறையில் பணியாற்றியபோதும் அவர் மனம்முழுதும் சமூகத்தின் மீதே இருந்தது. . . நவீன விவசாயம் பசி பட்டினியை போக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் பக்கவிளைவுகள் எதிர்கால விவசாயத்தையும், மனித சமூகத்தையும் பெரும் சிக்கலில் கொண்டு சேர்க்குமோ என்ற அச்சம் பாமயன் அவர்களை உழவை நோக்கி சிந்திக்க தூண்டியது. ஜப்பானில் நஞ்சில்லா உழவில் புரட்சி செய்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இயற்கை...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

நாள் தோறும் முளைக்கும் புது புது உணவகங்கள் . . . மூலைக்கு மூலை காய்கறி கடைகள் . . . உணவுக்கு கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் மக்கள் என ஒரு Food City-யா மாறி வருகிறது தமிழ்நாடு உணவு பஞ்சம் என்ற நிலை மாறி . . உணவு மீதம் என்ற நிலை உருவாகி வருகிறது…. இப்படி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை - Red light போட்டு தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்புகிறது மனம் . . இவ்வளவு செலவு செய்யும் மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கிறதா.? நாம் செலவிடும் பணம்… உழவர்கள் வாழ்வை வளமாக்குகிறதா..? மக்களுக்கு தரமான உணவும் – உழவர்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்க என்ன செய்ய முடியும் என யோசித்தது ஒரு மனம் - - உருவானது ‘நம்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

எல்லோருக்கும் வாழ்க்கையில சீக்கிரமே முன்னேறணும் என்கிற கனவு இருக்கும். . . ஒரே பாட்டில் வாழ்க்கையே மாறிட வேண்டும் என ஆசை இருக்கும் .. . ஆனா வாழ்க்கை - படம் அல்ல. . . இங்கு முன்னேற்றம் அவ்வளவு சாதரணமா வராது. . . ஒரு தலைமுறைக்கான கடின உழைப்பு . . . நல்லா வாழ்ந்து காட்டனும்ங்கிற வைராக்கியம். . . சோதனைகளிலும் சோர்ந்து போகாத துணிவு . . இதுதான் வாழ்க்கையில் வெற்றியடைய செய்கிறது.. அன்றாடம் வறுமையில் சுழலும் கூலித்தொழிலாளர் வாழ்க்கை. . . ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகள் . . அனைத்தையும் கடந்து வைராக்கியத்தையே மூலதனமாக கொண்டு , 35 வருடம் உழைத்து. . உழைத்தே . . . தன் குடும்பத்தைத் தலைநிமிரச் செய்துள்ளார். . விவசாயி பழனியம்மாள்.. படிப்பறிவு இல்லாத...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

கண்களை மூடியபடி . . . ஊட்டியைப் பற்றி நினைக்கும் போது . . நம் மனக்கண்ணில் விரிவது . . உயரமான மரங்கள் , பச்சைப் பசேல் புல் வெளிகள் . குளிர்ச்சியான காற்று.. பனி படர்ந்த சாலைகள். . . அதன் நடுவே ஒரு குப்பைக் கூளம் தெரிந்தால் ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

ஆற்றங்கரையில் பிறந்த மனித நாகரிகம். . ஏரியையும் குளங்களையும் வெட்டி நீரை சேமித்து வளரத்தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் நீர்ப்பிடிப்பு பகுதியாய் அறியப்பட்ட ஏரி குளங்கள் பலவும் நகர்மயமாதலின் அசுர வளர்ச்சியில் சிக்குண்டு காணாமல் போயின, எஞ்சியவை கழிவு நீர் குளங்களாகவும், கேட்பாரற்ற குப்பை மேடுகளாவும் மாறிப்போயின. மரங்களுக்கு வேர்களை போல ஏரி குளங்களுக்கு நீர்வழிப்பாதை. நீர்வழிப்பாதையை இழந்த ஏரி குளங்கள் பட்டுப்போன மரமாய் பயனற்றுப் போகும், அப்படி வேர்களைத் தொலைத்து தன்னை இழந்த முடிகுளம் ஏரியை தங்கள் பெரு முயற்சியால் உயிர் கொடுத்து மீட்டுள்ளனர் திருப்பூரின் வேர்கள் அமைப்பினர். 2010 இல் சுற்றுச்சூழலைக் காக்க இளைஞர்கள் இணைந்து உருவாக்கியது தான் வேர்கள் அமைப்பு. . திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் மரங்கள் நடுவது. . சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவதே அவர்களின் ஆரம்பகட்ட செயல்பாடு.. 30 வருடங்களுக்கு முன் திருப்பூரின்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 13.02.2025

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கபடும் மாவட்டங்களில் முதலில் முந்தி இருப்பது பெரம்பலூர் மாவட்டம். அதிலும் பின்தங்கி ஒடுங்கி போன ஒரு ஒன்றியம் எப்படி இருக்கும், காணும் இடமெல்லாம் மானாவாரி காடுகளே அதிகம். முறையற்ற காலநிலையும், நவீன ரக வேளாண்மையின் செலவினங்களும் வேப்பூர் பகுதி விவசாயத்தின் முதுகெழும்பையே முறித்துப் போட்டது. அந்நிலையை மாற்ற பெரம்பலூரின் முந்தைய தலைமுறையின் விவசாயமான சிறுதானிய பயிரிடலை கையில் எடுத்து, வறுமையின் பிடியில் இருந்து பெரம்பலூர் விவசாயிகளை மீட்டுள்ளனர் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு. பெரம்பலூர் மானாவரி காடுகளில் மக்காச்சோளமும், PT ரக பருத்தியையும் பயிரிட்டு, மருந்தடித்து மருந்தடித்தே நொந்து போனவர்கள் அப்பகுதி விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு மருந்தின் அதீத விஷதன்மையால் 5 அப்பாவி விவசயிகள் உயிர் பறி போன பின்தான் விவசாயிகளுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய ஆபத்து...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 13.02.2025

விதை ஒன்று மண்ணில் விழுந்தால் தான் உழவுத் தொழில் என்று ஒன்று நடக்கும், அந்த விதைக்கு கூட பிறர் கையை எதிர்நோக்கும் சூழல் இன்று விவசாயிகளுக்கு ஏற்பட்டது ஏன்.? கலப்பின விதைகள் ஆக்கிரமித்து கிடக்க பாரம்பரிய விதைகள் களவு போனத ஏன் .? இப்படி பதில் கிடைக்கா கேள்விகளைக் கேட்பதை விட பாரம்பரிய விதைகளை விவசாயிகள் கையில் கொண்டு சேர்ப்போம் அதுதான் விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்றுவதற்கான வழி என 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, தமிழ் அறிஞர் வெங்கடாசலம் அவர்களால் போடப்படட விதை, இன்று கிளை விட்டு பல்கிப் பெருகி வளர்ந்து, தற்சார்பு உழவர் வாழ்வுக்கு உறுதுணையாய் உயர்ந்து நிற்கிறது காலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கத்தில் விவசாயமே பிரதான தொழில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக உள்ளூர் விதைகளுக்கான மாநாட்டை கலசபாக்கத்தில்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

மாரி யல்லது காரியமில்லை இவ்வுலகில். . அதுவும் உழுதொழிலுக்கு நீர் என்பது உடலில் ஓடும் குருதியை போல. . அதை உணர்ந்தே நம் முன்னோர்கள் வழிந்தோடி கடல் கடக்கும் நீரை, ஏரி, குளம், குட்டை , கண்மாய் என அனைத்து வழிகளிலும் சேமித்து உழவுக்கு உயிர் ஊட்டி வந்தனர். ஆனால் இன்றோ வேர்களை வெட்டிய மரமாய் நீர் வழித்தடத்தை இழந்த பல ஏரி குளங்கள் உயிரற்ற சடலாமாய் கிடக்கின்றன. நதியை பெண்னோடு ஒப்பிடுவர், மழையை பெண்ணுக்கு உவமையாக்குவர், நீருக்கும் பெண்ணுக்குமான தொடர்பு தொப்புள் கொடி உறவு, பிள்ளை பசியைக் கண்டு பொறுக்காத தாய் போல வறண்டு கிடந்த நீர்நிலைகள் கண்டு அதை மீட்டெடுக்க எண்ணி, அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து, 30 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இன்று மீண்டும் உயிர் பெற்று விவசாயம் வளம் பெற...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

வாழை குலை தள்ளிய பின் பயனற்று மண் தின்று போகும் வாழை, அப்படிப்பட்ட அந்த வாழையைக் கொண்டே பல பெண்களின் வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக் காட்டியிருக்கிறார் நாமக்கல் மோகனூரைச் சேர்ந்த தொழில் முனைவோர் சுகந்தி. திருமணம் என்ற தடையால் தன் படிப்புக் கனவை தொலைத்த பல கோடி தமிழ்ப்பெண்களுள் சுகந்தியும் ஒருவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடனே பிடிக்காத திருமணம். ஆனால் அதோடு தன் வாழ்வு முடிந்துவிட்டது என வீட்டில் முடங்கவில்லை. தன் தடைகளை தகர்த்தெறிய வேண்டும் என்றால் கல்வி மட்டுமே ஒரே தீர்வு என முடிவு செய்து படிப்பை தொடர்ந்தார். தொலை தூர கல்வி மூலம் BA முடித்து அதோடு நின்றுவிடாமல் MA பட்டமும் பெற்றார். கல்வி ஒருவருக்கு அறிவை மட்டும் கொடுப்பதில்லை அகத்தை திறந்து சமூகத்தை அக்கறையோடு பார்க்கும் மனதையும் கொடுகிறது. தன் வாழ்வில் கஷ்டங்களையும் சிரமங்களையும், பிடிக்காத...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

உழவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது கால்நடை வளர்ப்பு… அவர்கள் நொடிந்து ஒடிந்துவிடாத படி, தாங்கிப் பிடிக்கும் உயிருள்ள ஊன்றுகோல்கள் தான் ஆடு மாடு கோழிகள். பட்டி ஆடுகளும் பால் கறவை மாடுகளும் தான் இன்று பல உழவர் குடும்பங்களை பசியாற செய்து கொண்டுள்ளன. கால்நடைகளுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த உழவர் குடும்பமே நொடிந்து போகும். அப்படிப்பட்ட சூழலில் அலைக்கும் அபயகுரல்களுக்கு இரவு பகல் பாராமல் ஓடி வந்து மருத்துவ உதவி செய்து உழவருக்கு உறுதுணையாய் இருந்து வருபர் தான் கால்நடை மருத்துவர் விஜயகுமார். 35 வருடகால மருத்துவப்பணியில் அவர் தனது குடும்பத்தோடு செலவிட்ட நேரத்தை விட கால்நடைகளோடு செலவிட்ட நேரேமே அதிகம். காட்சிக்கு எளியவர், கடும் செல்லை தவிர்ப்பவர் , இல்லாதவருக்கு இயன்றதை செய்யும் ஈகை குணத்தவர் என அவரை 30 வருடங்கள் அருகில்...