வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை வட்டம், பள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜா. 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகளை கண்டுபிடிப்பதில் வல்லவர். மழை நீர் சேகரிப்பு தொழில்நுட்பம், கடலை பறிக்கும் இயந்திரம், சிறிய உழவு ஓட்டும் இயந்திரம், காட்டு விலங்குகளை விரட்டும் கருவி போன்ற பல கருவிகளை வடிவமைத்துள்ளார். சிறு குறு வேளாண்மைக்குப் பயன்படும் கருவிகள் வடிமைப்புக்கான போட்டியில் இரண்டாம் பரிசாக இவருடைய "ஆழ்துளை கிணற்றிலிருந்து தானியங்கியாக கிணற்றில் நீர் நிரப்பும் நுட்பம்" இரண்டாம் பரிசை வென்றது. உழவர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உழவர் விருதும் ரூபாய் 25 ஆயிரத்திற்க்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ...