உழவர் விருதுகள் – 2023 – திருமிகு. வானகம் ரமேஷ் – சிறந்த வேளாண் பங்களிப்பு
801
post-template-default,single,single-post,postid-801,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2023 – திருமிகு. வானகம் ரமேஷ் – சிறந்த வேளாண் பங்களிப்பு

திருமிகு. வானகம் ரமேஷ் – சிறந்த வேளாண் பங்களிப்புயில் சிறந்த பங்களிப்பு

தமிழ்நாட்டின் மத்தியில் இயற்கை வேளாண் சார்ந்த பயிற்சிகளுக்காகவும் பரிசோதனைக்காகவும் ஒரு மாபெரும் பண்ணையை
உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையின் மூலம் 2009 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் கடவூரில் உருவாக்கப்பட்டது வானகம்..

30 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக, கருங்கல் பாறைகள் பொதிந்து கால்நடைகள் மேய்க்ககூட பயன்படாத கட்டுத்தரையாக கிடந்த அந்த நிலத்தை சீர்படுத்தி குளங்கள் வெட்டி, நெல், வாழை, மஞ்சள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், வெங்காயம். மரவள்ளி கிழங்கு என முப்போகம் விளையும் பூமியாகவும் பசுமை போர்த்திய வனமாகவும் காட்சியளிக்க பெரும் பங்காற்றியுள்ளவர் வானகம் ரமேஷ்..

வானகத்தின் முதல் தன்னார்வலராக தன்னை இணைத்துக் கொண்டவர் இன்று அறங்காவலர், பொருளாளர் என வானகத்தின் செயல்திட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

சுனாமி பேரிடரால் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மீட்டெடுக்கும் பணியை நம்மாழ்வாரும் அவரது குழுவினரும் செய்தபோது தன்னையும் அப்பணியில் இணைத்துக் கொண்டவர் ரமேஷ். அதன்பிறகு, 15 ஆண்டுகாலம் நம்மாழ்வாரின் அடியொற்றி எல்லாக்களங்களிலும் நின்றார் ரமேஷ்.

முதுகலை நுண்ணுயிரியல் பட்டதாரியான இவர் , பண்ணை வடிவமைப்பு, இடுபொருள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றவர். தான் கற்ற கல்வியை வேளாண்மையோடு இணைத்து அடுத்த தலைமுறைக்குப் பகிர்ந்தளித்து வருபவர். விவசாயிகளின் தேவையறிந்து கிராமம் கிராமமாகச் சென்று மக்களோடு மக்களாக நின்று தேவையானவற்றைச் செய்துகொடுப்பவர். கிராமங்களில் அழிந்துப் போன பாரம்பரிய மரங்கள், நீரோடைகள் என இவர் மீட்டுருவாக்கம் செய்தது ஏராளம்.. எந்த விவசாய நிலத்திலும் பண்ணை வடிவமைப்பை வெற்றிகரமாக உருவாக்கும் ரமேஷ்.

இதுவரை பல ஆயிரம் இளைஞர்களுக்கு நஞ்சில்லா வேளாண் மற்றும், பண்ணை உருவாக்க பயிற்சிகளை அளித்துள்ளார். நம்மாழ்வாரின் நஞ்சில்லா உணவுக்கான பயணத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து செயல்படுவதோடு அதற்காக அளித்துவரும் வியத்தகு பங்களிப்பை பாராட்டி இவருக்கு “சிறந்த வேளாண் பங்களிப்பு” க்கான உழவர் விருதும் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Post A Comment