Admin
-1
archive,author,author-uvan-kartusr,author-1,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

உலகில் தோன்றிய புது புது மாற்றங்கள், புதுபுது கண்டுபிடிப்புகள் , புது புது சிந்தனைகள் என அனைத்திற்குப் பின்னாலும் இருப்பது தன்னலமற்ற தனிநபர்களின் உழைப்பு மட்டுமே. . அந்த வரிசையில் 35 ஆண்டுகளாக தன் வாழ்வையே உழவுக்காக அற்பணித்தவர் தான் மதுரையை சேர்ந்த “பாமயன் என்கின்ற பாலசுப்பிரமணியன் . . . முதுநிலை படிப்பு முடித்து பத்திரிகை துறையில் பணியாற்றியபோதும் அவர் மனம்முழுதும் சமூகத்தின் மீதே இருந்தது. . . நவீன விவசாயம் பசி பட்டினியை போக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் பக்கவிளைவுகள் எதிர்கால விவசாயத்தையும், மனித சமூகத்தையும் பெரும் சிக்கலில் கொண்டு சேர்க்குமோ என்ற அச்சம் பாமயன் அவர்களை உழவை நோக்கி சிந்திக்க தூண்டியது. ஜப்பானில் நஞ்சில்லா உழவில் புரட்சி செய்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இயற்கை...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

நாள் தோறும் முளைக்கும் புது புது உணவகங்கள் . . . மூலைக்கு மூலை காய்கறி கடைகள் . . . உணவுக்கு கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் மக்கள் என ஒரு Food City-யா மாறி வருகிறது தமிழ்நாடு உணவு பஞ்சம் என்ற நிலை மாறி . . உணவு மீதம் என்ற நிலை உருவாகி வருகிறது…. இப்படி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை - Red light போட்டு தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்புகிறது மனம் . . இவ்வளவு செலவு செய்யும் மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கிறதா.? நாம் செலவிடும் பணம்… உழவர்கள் வாழ்வை வளமாக்குகிறதா..? மக்களுக்கு தரமான உணவும் – உழவர்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்க என்ன செய்ய முடியும் என யோசித்தது ஒரு மனம் - - உருவானது ‘நம்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

எல்லோருக்கும் வாழ்க்கையில சீக்கிரமே முன்னேறணும் என்கிற கனவு இருக்கும். . . ஒரே பாட்டில் வாழ்க்கையே மாறிட வேண்டும் என ஆசை இருக்கும் .. . ஆனா வாழ்க்கை - படம் அல்ல. . . இங்கு முன்னேற்றம் அவ்வளவு சாதரணமா வராது. . . ஒரு தலைமுறைக்கான கடின உழைப்பு . . . நல்லா வாழ்ந்து காட்டனும்ங்கிற வைராக்கியம். . . சோதனைகளிலும் சோர்ந்து போகாத துணிவு . . இதுதான் வாழ்க்கையில் வெற்றியடைய செய்கிறது.. அன்றாடம் வறுமையில் சுழலும் கூலித்தொழிலாளர் வாழ்க்கை. . . ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகள் . . அனைத்தையும் கடந்து வைராக்கியத்தையே மூலதனமாக கொண்டு , 35 வருடம் உழைத்து. . உழைத்தே . . . தன் குடும்பத்தைத் தலைநிமிரச் செய்துள்ளார். . விவசாயி பழனியம்மாள்.. படிப்பறிவு இல்லாத...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

கண்களை மூடியபடி . . . ஊட்டியைப் பற்றி நினைக்கும் போது . . நம் மனக்கண்ணில் விரிவது . . உயரமான மரங்கள் , பச்சைப் பசேல் புல் வெளிகள் . குளிர்ச்சியான காற்று.. பனி படர்ந்த சாலைகள். . . அதன் நடுவே ஒரு குப்பைக் கூளம் தெரிந்தால் ...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2026 / 21.01.2026

ஆற்றங்கரையில் பிறந்த மனித நாகரிகம். . ஏரியையும் குளங்களையும் வெட்டி நீரை சேமித்து வளரத்தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் நீர்ப்பிடிப்பு பகுதியாய் அறியப்பட்ட ஏரி குளங்கள் பலவும் நகர்மயமாதலின் அசுர வளர்ச்சியில் சிக்குண்டு காணாமல் போயின, எஞ்சியவை கழிவு நீர் குளங்களாகவும், கேட்பாரற்ற குப்பை மேடுகளாவும் மாறிப்போயின. மரங்களுக்கு வேர்களை போல ஏரி குளங்களுக்கு நீர்வழிப்பாதை. நீர்வழிப்பாதையை இழந்த ஏரி குளங்கள் பட்டுப்போன மரமாய் பயனற்றுப் போகும், அப்படி வேர்களைத் தொலைத்து தன்னை இழந்த முடிகுளம் ஏரியை தங்கள் பெரு முயற்சியால் உயிர் கொடுத்து மீட்டுள்ளனர் திருப்பூரின் வேர்கள் அமைப்பினர். 2010 இல் சுற்றுச்சூழலைக் காக்க இளைஞர்கள் இணைந்து உருவாக்கியது தான் வேர்கள் அமைப்பு. . திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் மரங்கள் நடுவது. . சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவதே அவர்களின் ஆரம்பகட்ட செயல்பாடு.. 30 வருடங்களுக்கு முன் திருப்பூரின்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

இளம் தலைமுறை பொழுதுபோக்கும் சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி நம்பிக்கையை விதைக்கிறார் சிவகாசி மாவட்டம் பூவாகபுரம் என்னும் சின்ன கிராமத்தில் பிறந்த தினேஷ்குமார். வேளாண்மையை வெற்றிகரமாக செய்யும் விவசாயிகளையும் தொழில்நுட்பங்களையும் 'நவீன உழவன்' என்ற யூடியூப் சேனல் மூலம் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லும் இந்த எம்பிஏ பட்டதாரி, ஒரு தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்கிறார். தன் பயணங்களில் கண்டறியும் வித்தியாசமான விவசாயிகளையும் வியப்பான தொழில்நுட்பங்களையும், பொதுவெளிக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ஒரு முகநூல் பக்கத்தைத்தொடங்கியதில் தொடங்குகிறது இவரது வெற்றிப்பயணம். தன் உற்பத்தியை தானே மதிப்பூட்டி கூடுதல் லாபம் பார்க்கும் விவசாயிகள், ஒருங்கிணைந்த வேளாண்மை மூலம் பெரும் லாபம் ஈட்டும் விவசாயிகள், புதுப்புது தொழில்நுட்பங்களைக் கையாளும் விவசாயிகள், மாறுபட்ட பயிர்களை பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்யும் விவசாயிகளென சத்தமின்றி சாதித்துக்கொண்டிருக்கும் விவசாயப்...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

புதுவையின் ஏம்பலம் கிராமத்தில் வசிக்கும் இந்த 25 வயது இளைஞன், கைவிட்டுப்போன ஐநூறுக்கும் மேற்பட்ட மண் சார்ந்த மரபு விதைகளை மீட்டெடுத்து மீண்டும் நம் நிலங்களில் உயிர்ப்பித்திருக்கிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படித்த சுந்தர், ஓர் ஆவணப்படத்துக்காக தொடங்கிய தேடல், நம்மாழ்வாரிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. அந்த சந்திப்புதான் சுந்தரின் பாதையை இயற்கையின் பக்கம் திருப்பியது. விதையை முன்வைத்து நடக்கும் வேளாண் அரசியலையும் நம் பாரம்பர்ய விதைகளின் தனித்தன்மைகளையும் நம்மாழ்வார் விவரிக்க, நஞ்சில்லா விவசாயம் செய்ய முடிவெடுத்தார் சுந்தர். ஆனால் அதற்குப் போதுமான நிலமில்லை. தன் வீட்டையொட்டியிருக்கும் சின்ன இடத்தில், காய்கறிகளைப் பயிரிட நினைத்த சுந்தருக்குக் கிடைத்தவையெல்லாம் வீரியரக விதைகள். மரபு விதைகளுக்கான அவரது பயணம் அப்போதுதான் தொடங்கியது. தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து 30 மரபு...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 02.02.2023

கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவு குழு - சிறந்த வேளாண் கூட்டுறவு அமைப்பு. விவசாயம் லாபம் தரும் தொழிலல்ல என்ற கற்பிதம்தான் இளைய தலைமுறையை விளைநிலங்களை விட்டு விலக வைக்கிறது. திட்டமிட்ட உழைப்பும் தொழில்நுட்ப அறிவும் இருந்தால் வேளாண்மையிலும் லட்சங்களை ஈட்டலாம் என்ற நம்பிக்கையை தங்கள் செயல்வழி விதைக்கிறார்கள் அத்திவாக்கத்தை சேர்ந்த இந்தப் பெண்கள். 2015 ஆம் ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலிருக்கும் கீழ் அத்திவாக்கத்தை சேர்ந்த 15 பெண்களை ஒருங்கிணைத்து 'கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாயக் கூட்டுறவுக் குழு' என்ற சிறு அமைப்பொன்றை உருவாக்கியது Human Resource Development Foundation என்ற அமைப்பு. சாதி, மத பேதங்களை கடந்து, வேளாண்குடியாக கரம்கோர்த்து ஒரு தரிசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யத் தொடங்கியது இந்தக்குழு. ஒருபோகம் மட்டுமே விளைச்சல் தந்த...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு. வானகம் ரமேஷ் - சிறந்த வேளாண் பங்களிப்புயில் சிறந்த பங்களிப்பு தமிழ்நாட்டின் மத்தியில் இயற்கை வேளாண் சார்ந்த பயிற்சிகளுக்காகவும் பரிசோதனைக்காகவும் ஒரு மாபெரும் பண்ணையை உருவாக்க வேண்டும் என்ற நம்மாழ்வாரின் சிந்தனையின் மூலம் 2009 ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் கடவூரில் உருவாக்கப்பட்டது வானகம்.. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தரிசாக, கருங்கல் பாறைகள் பொதிந்து கால்நடைகள் மேய்க்ககூட பயன்படாத கட்டுத்தரையாக கிடந்த அந்த நிலத்தை சீர்படுத்தி குளங்கள் வெட்டி, நெல், வாழை, மஞ்சள், காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், வெங்காயம். மரவள்ளி கிழங்கு என முப்போகம் விளையும் பூமியாகவும் பசுமை போர்த்திய வனமாகவும் காட்சியளிக்க பெரும் பங்காற்றியுள்ளவர் வானகம் ரமேஷ்.. வானகத்தின் முதல் தன்னார்வலராக தன்னை இணைத்துக் கொண்டவர் இன்று அறங்காவலர், பொருளாளர் என வானகத்தின் செயல்திட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்புகளை கவனித்து...

உழவர் விருதுகள், உழவர் விருதுகள் - 2023 / 01.02.2023

திருமிகு.வெற்றிவேல், உழவர் பூமி  - கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த வெற்றிவேல், ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தில் இருந்து மேலெழுந்து வந்தவர். பள்ளிக்காலத்திலேயே அப்பாவை இழந்து, பெரும்  வறுமையில் கூலி வேலை செய்த  அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர். காலை கல்லூரி   இரவு முழுவதும் கிடைத்த வேலைகள் என  கடும் சிரமங்களுக்கு மத்தியில்  பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இணைந்த வெற்றிவேலை,  நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புத்தரும் ஒரு பசுமைத் தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது காலம். படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் பொருளீட்ட வேண்டும் என்ற கனவோடு இருந்தவரின் வாழ்க்கையை மாற்றியது, 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தன் வெளிநாட்டு கனவை கைவிட்டு இம்மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் தன்...