சிறந்த வேளாண் கூட்டமைப்பு – மக்கள் நல சந்தை
952
post-template-default,single,single-post,postid-952,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

சிறந்த வேளாண் கூட்டமைப்பு – மக்கள் நல சந்தை

நாள் தோறும் முளைக்கும் புது புது உணவகங்கள் . . . மூலைக்கு மூலை காய்கறி கடைகள் . . . உணவுக்கு கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் மக்கள் என ஒரு Food City-யா மாறி வருகிறது தமிழ்நாடு

உணவு பஞ்சம் என்ற நிலை மாறி . . உணவு மீதம் என்ற நிலை உருவாகி வருகிறது…. இப்படி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நம்மை – Red light போட்டு தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்புகிறது மனம் . . இவ்வளவு செலவு செய்யும் மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்கிறதா.? நாம் செலவிடும் பணம்… உழவர்கள் வாழ்வை வளமாக்குகிறதா..?

மக்களுக்கு தரமான உணவும் – உழவர்களுக்கு வளமான வாழ்வும் கிடைக்க என்ன செய்ய முடியும் என யோசித்தது ஒரு மனம் – – உருவானது ‘நம் சந்தை’ –விவசாயம் செய்து லாபம் பார்க்கமுடியாமல் தவித்த விவசாயிகளையும் – தரமான உணவுக்காக ஏங்கிய மக்களையும் ஒன்றாய்க் கை கோர்க்க வைத்தது திரு. செந்தமிழ்செல்வன் அவரது கை. உருவானது நஞ்சில்லாத நம் சந்தை.

2014 தன் வீட்டை விற்று தரிசான நிலத்தை வாங்கி அதற்கு அறிவுத்தோட்டம் எனப் பெயர் வைத்து, 100 விவசாயிகளை அழைத்து கூட்டம் போட்டு தொடங்கிய நிகழ்வு இன்று பல்லாயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் வளர்ந்துள்ளது. நம் சந்தையை அரசே ஏற்றதால் 2022 இல் மக்கள் நல சந்தை உருவானது.

பொருட்களை விற்பது வாங்குவது என்று இல்லாமல். . . விவசாய தொழில் முனைவோர்களையும் உருவாக்கி வருகிறது மக்கள் நல சந்தை.. பொருட்களை மதிப்பு கூட்டல் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானத்திற்கும் வழி வகுத்துக் கொடுத்துள்ளது.

விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாய் சென்று பார்வையிட்டு நஞ்சில்லா வேளாண்மை முறையில் விளைந்த பொருட்களுக்கு மட்டுமே விற்பனைக்கு அனுமதி அளிக்கிறது.

நஞ்சில்லா விளைபொருட்கள் மட்டுமே சந்தையில் விற்கப்படவேண்டும், அதுவும் விவசாயிகள் மட்டுமே நேரடியாக மக்கள் நலச்சந்தைக்கு பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது மக்கள் நலச்சந்தை.

அதோடு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமத்து கைம்மணம் என்ற பெயரில் உணவு விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது.

அதே போல பெண் விவசாயிகளை ஊக்குவித்து பெண்கள் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்காற்றி வருகிறது மக்கள் நல சந்தை. .. . Woman Agripreneur Network மூலம் பெண்களுக்கு நஞ்சில்லா வேளாண்மை, மதிப்புக் கூட்டல் பயற்சி அளித்து தொழில் முனைவோர்களாக மாற்றி உள்ளது.

மண் நலமையம் மூலம் பூச்சி தாக்குதல்களை எதிர்கொள்ளும் முறை, பருவ மாற்றத்தை எதிர்கொள்ளும் வழி போன்றவற்றை பற்றி உழவர்களுக்கு பயிற்சி அளித்து உறுதுணையாய் இருந்து வருகிறது.

தோட்டத்தை அறிவுத் தோட்டமாக மாற்றியவர் சந்தையை ஆராய்ச்சித் தளமாக மாற்றி அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார் செந்தமிழ் செல்வன்.

நஞ்சில்லா வேளாண்மை என்றாலே அதில் வருமானம் இருக்காது என்ற பொது புத்தி மனநிலையை மாற்றி வருமானமும் பார்க்க முடியும் மக்களுக்கு நஞ்சில்லா உணவு பொருட்களையும் கொடுக்க முடியும் என நம்பிக்கை ஊட்டி நிரூபித்து வருகிறது மக்கள் நல சந்தை.

மக்கள் நல சந்தையின் இம்முயற்சியை சிறப்பிக்கும் விதமாக கூட்டமைப்பு உழவர் விருதளிப்பதில் மட்டிலலா மகிழ்வு கொள்கிறது உழவன் ஃபவுண்டேஷன்.

No Comments

Sorry, the comment form is closed at this time.