21 Jan பழனியம்மாள் – சிறந்த பெண் விவசாயிக்கான உழவர் விருது
எல்லோருக்கும் வாழ்க்கையில சீக்கிரமே முன்னேறணும் என்கிற கனவு இருக்கும். . . ஒரே பாட்டில் வாழ்க்கையே மாறிட வேண்டும் என ஆசை இருக்கும் .. . ஆனா வாழ்க்கை – படம் அல்ல. . .
இங்கு முன்னேற்றம் அவ்வளவு சாதரணமா வராது. . . ஒரு தலைமுறைக்கான கடின உழைப்பு . . . நல்லா வாழ்ந்து காட்டனும்ங்கிற வைராக்கியம். . . சோதனைகளிலும் சோர்ந்து போகாத துணிவு . . இதுதான் வாழ்க்கையில் வெற்றியடைய செய்கிறது..
அன்றாடம் வறுமையில் சுழலும் கூலித்தொழிலாளர் வாழ்க்கை. . . ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகள் . . அனைத்தையும் கடந்து வைராக்கியத்தையே மூலதனமாக கொண்டு , 35 வருடம் உழைத்து. . உழைத்தே . . . தன் குடும்பத்தைத் தலைநிமிரச் செய்துள்ளார். . விவசாயி பழனியம்மாள்..
படிப்பறிவு இல்லாத தாய் தந்தையருக்கு 7 பிள்ளைகளல் ஒருவராய் பிறந்து 15 வயதில் திருமணம்.
கணவர் வீட்டிலோ மண்ணெண்ணெய் விளக்கு, மூன்று பானை இதுதான் அவர்கள் சொத்து. ஊர் ஊராக சென்று விளக்குமாறு விற்று வந்தால்தான் அன்றாட வாழ்க்கையே ஓட்ட முடியும் என்ற சூழ்நிலை. இதே நிலை நாளை தன்னோட பிள்ளைகளுக்கும் நீடித்தால் என்ற பயம்.
அதற்காக அவர் பேக்கரிகளுக்கு நிலக்கரி போடுவது, கரும்பு வெட்ட செல்வது , வாழைத்தார் சுமப்பது , மில் வேலை என செய்யாத வேலை இல்லை. இப்படி வாழ்க்கையில் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும்போதுதான் அவர் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடக்கிறது. .
வீராப்போடு பழனியம்மாள் களம் இறங்கி இருந்தாலும், அவர் ஆடு மாடோடு முடங்கிவிடவில்லை படிப்பறிவு இல்லை என எங்கும் தயங்கி நிற்கவில்லை.
அரசின் மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தை ஏற்று நடத்தினார்.
எந்த ஊரில் தினக்கூலியாக கஷ்டப்பட்டாரோ அதே ஊரில் தான் இரவுப் பகலாக உழைத்து 10 ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயியாக உயர்ந்து நின்றார்.
தான் வளர்ந்ததோடு மட்டுமில்லாமல் தன்னைப்போல் விவசாயக் கூலியாக கஷ்டப்பட்ட 10 பெண்களுக்கு தன் நிலத்தில் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை கொடுத்து குணத்திலும் உயர்ந்து நிற்கிறார் பழனியம்மாள்.
தமிழ்நாடு இன்று உயர்ந்துள்ளது என்றால் அதற்கு பின்னால் பழனியம்மாள் போன்ற பல அம்மாக்களின் கடும் உழைப்பு உள்ளது . .
கரடு முரடான உழைப்பால் தன் குடும்பத்தை உயர்த்தியது மட்டுமல்லாது, பிறர் வாழ்விற்கும் வழிகாட்டி வரும் கோவில்பட்டி பழனியம்மாள் அவர்களுக்கு சிறந்த பெண் விவசாயிக்கான உழவர் விருது வழங்கி கௌரவிப்பதில் பெருமை கொள்கிறது கொள்கிறது உழவன் ஃபவுண்டேஷன்.
Sorry, the comment form is closed at this time.