கிளீன் குன்னூர்
942
post-template-default,single,single-post,postid-942,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

கிளீன் குன்னூர்

கண்களை மூடியபடி . . . ஊட்டியைப் பற்றி நினைக்கும் போது . . நம் மனக்கண்ணில் விரிவது . . உயரமான மரங்கள் , பச்சைப் பசேல் புல் வெளிகள் . குளிர்ச்சியான காற்று.. பனி படர்ந்த சாலைகள். . . அதன் நடுவே ஒரு குப்பைக் கூளம் தெரிந்தால் … உடனே நம் மன அமைதி சீர்குலைகிறது. . கற்பனையாகக் கூட அப்படி ஒரு சூழலை நினைக்க மறுக்கிறது நம் மனம்.

வீட்டின் வரவேற்பறையில் குப்பைக் கூடையை வைக்கத் தயங்கும் நாம் தான், நம் ஊரின் நுழைவாயிலில் குவிந்து கிடக்கும் குப்பைகளைக் கண்டும் காணாமல் கடந்து போகிறோம். நம் கைவிட்டு எறியும் ஒவ்வொரு குப்பையும் தான் ஊரின் குப்பைக் கூளமாக மாறிக் கிடக்கிறது. நாம் வீதியில் வீசி எறியும் குப்பை தான் உயிர் கொல்லி நோயாக நம் வீட்டுக்குள் நுழைகிறது. தெருவில் கிடப்பவை குப்பை அல்ல உயிரையே அழிக்கும் கொடிய நஞ்சு. இதை மாற்ற தேவ தூதர்கள் வர வேண்டியது இல்லை. . . சாதாரண மனிதர்களின் நல்லெண்ணமே போதும்.

அப்படி நல் உள்ளங்கள் ஒன்றிணைந்து, குப்பைகள் சூழ் குன்னூரை கிளீன் குன்னூராக மாற்றிக் காட்டியுள்ளது கிளீன் குன்னூர் அமைப்பு.

சமூக அக்கறை கொண்ட சமந்தா அவர்களின் முயற்சியால் 2014 இல் உருவானது கிளீன் குன்னூர் அமைப்பு. இந்த அமைப்பு குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதி குப்பைகளை தன்னார்வலர்களோடு சேர்ந்து அகற்றத் தொடங்கியது. மெல்ல மெல்ல குன்னூர் மீது படிந்திருந்த குப்பைக் கறை அகலத்தொடங்கியது.. Wild Life photography யில் ஆர்வமிக்க மருத்துவர் வசந்த், காடுகளில் கொட்டப்படும் குப்பையால் விலங்குகள் பறவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க எண்ணினார், இக்குழுவினரோடு தன்னையும் இணைத்துக் கொண்டார்.

குன்னூர் நீரோடையை சுத்தம் செய்து 18000 டன் குப்பைக்கழிவை அகற்றியது இவ்வமைப்பு. கழிவு என்று அனைத்தையும் கழிக்காமல் அதையும் பயனுள்ள வகையில் மாற்றும் எண்ணம் சமந்தாவின் மனதில் உதித்தது. குன்னூர் நகராட்சி துணையோடு குப்பைகளை உரமாக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இவர்களின் முயற்சிக்கு ஆதரவாக அரசும் துணை நிற்கிறது. பொது மக்களிடம் இருந்து தரம் பிரித்து குப்பைகளைப் பெற்று இவ்வமைப்பினரிடம் கொடுக்கின்றனர். தொடக்கத்தில் 2 டன் திட கழிவுகளை உரமாக்கியதில் இருந்து இன்று நாள்தோறும் 15 டன் குப்பைகளை உரமாக்கி வருகிறார்கள். சுற்றுவிட்டார விசாயிகளுக்கும் உர செலவு குறைந்து நல்ல முறையில் விவசாயம் செய்ய முடிகிறது.

அரசு தரும் பணம் போதாது என்ற போதும் பற்றாக்குறையை சமாளிக்க CSR நிதி திரட்டி இதை திறம்பட நிர்வகித்து வருகிறது கிளீன் குன்னூர் அமைப்பு. குப்பை மேலாண்மை மட்டுமல்ல பல பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகுத்துள்ளது.

குன்னூரின் சாலைகள் , தெருக்கள் , காடுகள் , நீரோடைகள் அனைத்தும் குப்பைகள் இல்லா தங்கள் இயற்கை அழகை மீட்டெடுத்துள்ளன. குன்னூரின் ஆரோக்கியம் காக்கப்பட்டுள்ளது.

க்ளீன் குன்னூர் அமைப்பினரின் இம்முயற்சி புது பாதையின் திறவுகோல். நாம் இணைந்தால் நம் ஊரின் முகத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதற்கு இவர்களே சாட்சி. குப்பைகளைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு செல்லாமல் குப்பையில் கைவைத்து அதையே ஒரு தொழிலாக மாற்றி சுற்றுச்சூழலை சுத்தமாக்க முடியும் என முயன்று சாதித்துக் காட்டி வரும் கிளீன் குன்னூர் அமைப்பிற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு உழவர் விருது வழங்குவதில் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறது உழவன் ஃபவுண்டேஷன்.

No Comments

Sorry, the comment form is closed at this time.