வேர்கள்
939
post-template-default,single,single-post,postid-939,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

வேர்கள்

ஆற்றங்கரையில் பிறந்த மனித நாகரிகம். . ஏரியையும் குளங்களையும் வெட்டி நீரை சேமித்து வளரத்தொடங்கியது. ஆனால் காலப்போக்கில் நீர்ப்பிடிப்பு பகுதியாய் அறியப்பட்ட ஏரி குளங்கள் பலவும் நகர்மயமாதலின் அசுர வளர்ச்சியில் சிக்குண்டு காணாமல் போயின, எஞ்சியவை கழிவு நீர் குளங்களாகவும், கேட்பாரற்ற குப்பை மேடுகளாவும் மாறிப்போயின.

மரங்களுக்கு வேர்களை போல ஏரி குளங்களுக்கு நீர்வழிப்பாதை. நீர்வழிப்பாதையை இழந்த ஏரி குளங்கள் பட்டுப்போன மரமாய் பயனற்றுப் போகும், அப்படி வேர்களைத் தொலைத்து தன்னை இழந்த முடிகுளம் ஏரியை தங்கள் பெரு முயற்சியால் உயிர் கொடுத்து மீட்டுள்ளனர் திருப்பூரின் வேர்கள் அமைப்பினர்.

2010 இல் சுற்றுச்சூழலைக் காக்க இளைஞர்கள் இணைந்து உருவாக்கியது தான் வேர்கள் அமைப்பு. . திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் மரங்கள் நடுவது. . சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு உண்டாக்குவதே அவர்களின் ஆரம்பகட்ட செயல்பாடு..

30 வருடங்களுக்கு முன் திருப்பூரின் நீர் ஆதாரமாக இருந்த ஏரி ஒன்று, கழிவு நீர் தொட்டியாகவும் குப்பை மேடாகவும் மாறிக்கிடந்ததைக் கண்ட வேர்கள் அமைப்பனர் அதை எப்பாடு பட்டாவது மீட்டாக வேண்டும் என துடித்தனர்.

அவர்கள் இறங்கி கழிவு நீர் அகற்றி தூர் வாரி முடித்த போது தான் அங்கிருந்த மக்களுக்கே அது ஒரு ஏரி என்பது தெரியவந்துள்ளது. அதுதான் திருப்பூர் நகரத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் உள்ள முடிகுளம் ஏரி. தூர்வாரிய மண்ணைக் கொண்டே கரையைப் பலப்படுத்தினர்.

மக்களுக்கு பயன்படும் ஏரி என்றாலும் அதை ஆக்கிரமித்து அழிக்கத் துடிப்பதும் அதே மக்கள் தான் என்பது தான் வேதனை. ஏரியை தூர்வாரினாலும் அதை பாதுகாப்பது மிகவும் சவாலாகவே இருந்துள்ளது. ஒரு கிலோ மீட்டர் வேலி அமைத்ததுடன் அரசிடம் கோரிக்கை வைத்து மேலும் 2 கிலோமீட்டர்க்கு வேலி அமைத்து காத்து வருகின்றனர்.

ஏரியை மீட்டாலும் அதன் நீர் வழிப்பாதை அடைபட்டுக்கிடந்தால் என்ன பயன்.? என யோசித்தவர்கள் அரசு மட்டும் சட்டத்தின் துணையோடு முடிக்குளம் ஏரியின் வேர்களான நீர் வழிபாதையையும் மீட்டுள்ளனர் வேர்கள் அமைப்பினர்.

இத்தனை செய்தாலும் கழிவு நீர் வந்து கலப்பதை தடுப்பது பெரும் பிரச்சனையாக தொடர்ந்தது. 16 இடங்களில் இருந்து வரும் கழிவு நீரை தடுக்க தொடர் முயற்சியை மேற்கொண்டனர். அரசும் அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து நிதி ஒதுக்கி கழிவு நீர் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றனர்.

ஒரு ஏரியை மீட்டெடுப்பது என்பது பிரசவ வலியை விட வலி நிறைந்த காரியம் தான். கிட்டதட்ட 7 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு தான் முடிகுளம் ஏரி புத்துயிர் பெற்றுள்ளது. ஒருகாலத்தில் பாழடைந்த ஏரி இன்று பறவைகள் சூழ் ஏரியாக மாறி உள்ளது. .. அன்று மக்கள் நடமாட்டமில்லா பகுதி இன்று மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடமாகிஉள்ளது. நிலத்தடி நீர் மட்டம் சட்டென உயர்ந்துள்ளது. ஏரி குளம் எல்லாம் கிராமத்தில் தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மாற வேண்டும் . . நகரத்திலும் அவை இருக்கவேண்டும்.

ஏரியை மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கான நீர் ஆதாரத்தையே மீட்டுருவாக்கி காப்பாற்றி உள்ளனர் வேர்கள் அமைப்பினர். நீரின்றி அமையாது உலகு அதேபோல் நீர்நிலைகள் இல்லாமல் இயங்காது உலகு, நீர் நிலைகளை மீட்க வேண்டும் என்ற வேட்கையோடு தொடர்ந்து இயங்கி முடிகுளம் ஏரிகாத்த வேர்கள் அமைப்பினருக்கு நீர் நிலைகளை மீட்டெடுத்ததில் சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருது வழங்குவதில் மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறது உழவன் ஃபவுண்டேஷன்.

No Comments

Sorry, the comment form is closed at this time.