சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்பு – நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு.
927
post-template-default,single,single-post,postid-927,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்பு – நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு.

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கபடும் மாவட்டங்களில் முதலில் முந்தி இருப்பது பெரம்பலூர் மாவட்டம். அதிலும் பின்தங்கி ஒடுங்கி போன ஒரு ஒன்றியம் எப்படி இருக்கும், காணும் இடமெல்லாம் மானாவாரி காடுகளே அதிகம். முறையற்ற காலநிலையும், நவீன ரக வேளாண்மையின் செலவினங்களும் வேப்பூர் பகுதி விவசாயத்தின் முதுகெழும்பையே முறித்துப் போட்டது.

அந்நிலையை மாற்ற பெரம்பலூரின் முந்தைய தலைமுறையின் விவசாயமான சிறுதானிய பயிரிடலை கையில் எடுத்து, வறுமையின் பிடியில் இருந்து பெரம்பலூர் விவசாயிகளை மீட்டுள்ளனர் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு.

பெரம்பலூர் மானாவரி காடுகளில் மக்காச்சோளமும், PT ரக பருத்தியையும் பயிரிட்டு, மருந்தடித்து மருந்தடித்தே நொந்து போனவர்கள் அப்பகுதி விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு மருந்தின் அதீத விஷதன்மையால் 5 அப்பாவி விவசயிகள் உயிர் பறி போன பின்தான் விவசாயிகளுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய ஆபத்து வலையில் சிக்குண்டுள்ளோம் என தெரியவருக்கிறது. ஏற்கனவே சிறுதானிய பயிர் முறைக்கு மாறி அதுபற்றி அப்பகுதி விவசாயிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கி வந்த நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவோடு கை கோர்க்க தொடங்கினர் விவசாயிகள்.

2015 ஆம் ஆண்டு 7 விவசாயிகளைக்கொண்டு வெறும் 5.5 ஏக்கர் நிலத்தில் தொடங்கப்பட்ட இச்சங்கம் இன்று 65 விவசாயிகளுடன் 160 ஏக்கர் பரப்பளவில் பரந்த விரிந்து நடந்துவருகிறது. சிறுதானிய பயிரிடலையே முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. . .

அனைத்து முதலீடுகளும் ஆவணமாக்கப்பட்டு, உழைக்கும் உழவர்க்கும் கூலி கணக்கிடப்பட்டு, பயிரிடும் நிலத்திற்கும் கூட ஒரு உத்தேச வாடகை நிர்ணயித்து அனைத்தையும் சேர்த்தே விளைந்த சிறுதானியத்திற்கு விலை நிர்ணயம் செய்யப்படுவது இவர்களின் சிறப்பு.

19 பெண்கள் கொண்ட இக்குழுவில் 11 பெண்கள் செயற்குழு உறுப்பினராக உள்ளனர். இக்குழுவே கூடி விவாதித்து நியாயமான விலை நிர்ணயம் செய்து வருகிறது.

இந்த நியாயமான இடை சுரண்டல் இல்லாத விவசாய முறையால் நஷ்டத்தை மட்டுமே சந்ததித்து வந்த விவசாயிகள் முதன்முதலாக இலாபத்தை கண்ணில் பார்த்து வருகின்றனர்.

பெரம்பலூர் பகுதிகளில் நவீனப் பயிர்களை பயிரிட்டு கடன் மேல் கடன் பட்டுக் கிடந்த உழவர்கள் எல்லாம் சிறுதானிய பயிர் விளைச்சலுக்கு மாறி இன்று ஓரளவு கடனில்லா நல்ல நிலைமையை எட்டியுள்ளனர்.

கடனில்லா வாழ்வை கனவு கண்டபடியே கழிகிறது இன்றைய விவசாயிகளின் வாழ்வு. அதை மாற்றி உழவர்கள் வாழ்வை உயர்த்த வேண்டும் என்ற உறுதியோடு செயல்பட்டு வரும் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு, சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்புக்கான உழவர் விருதும், ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.