உழவர்கள் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்பு – வெங்கடேஷ் , கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருமங்கலம், மதுரை.
864
post-template-default,single,single-post,postid-864,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர்கள் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்பு – வெங்கடேஷ் , கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், திருமங்கலம், மதுரை.

51 வயதான முன்னாள் இராணுவ வீரர் வெங்கடேஷ் . இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு தமிழ்நாடு அரசு பணியில் இணைகிறார், மின்சார வாரியம், திருச்சி பெல், வருவாய்த்துறை இப்படி பல துறைகளில் பணிபுரிகிறார். 2013 ஆம் ஆண்டு மதுரை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சூப்பர்வைசராக பணியில் சேர்கிறார்..

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தை பொறுத்தவரை வட மாவட்டங்களில் திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் நல்ல முறையில் இயங்கி வருகிறது… ஆனால் தென் தமிழகத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் சரிவர இயங்கவில்லை.. காரணம் விவசாயிகள் தங்கள் பொருட்களை கொண்டு வருவதில்லை, உடனடி பணத் தேவையின் பொருட்டு வியாபாரியிடம் அட்வான்ஸ் பெற்றுக் கொள்வது இப்படி நடைமுறைப் பிரச்சினைகள் இருந்துள்ளது..

இதை எல்லாம் சரி செய்ய 10 வருடங்களுக்கு முன்பே ஆட்டோ எடுத்துக் கொண்டு ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று விவசாயிகள் தங்கள் பொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வாருங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் விவசாயிகள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. காலங்கள் ஓடியது.. தன் முயற்சியை தொடர்ந்து இவர் செய்து வந்தாலும் பெரிய பயன் இல்லை..

பிறகு கொரானா காலத்தில் வாடிப்பட்டிக்கு டெப்டேசனில் வரும்போது பல வியபாரிகளிடம் பார்த்து பேசி மட்டையுடன் கூடிய தேங்காயை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வைக்கிறார் அதுதான் இவரின் முதல் வெற்றி. பிறகு கண்காணிப்பாளராக திருமங்கலம் மாற்றலாகி வந்தவுடன் மறுபடியும் 30000 நோட்டீஸ் அடித்து ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து தலைவரையும் சந்தித்து விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வரச் சொல்லுங்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்து தருகிறோம் என்கிறார்.. இந்த நேரத்தில் தகவல் தொழில் நுட்பமும் வளர்ந்திருக்க விவசாயிகள் விலையை தெரிந்துக் கொள்வது எளிதாகியுள்ளது… இவரின் தொடர் முயற்சியில் ஒரு சில விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வர அவர்களுக்கு நல்ல விலையுடன் 48 மணி நேரத்தில் விவசாயிகளின் அக்கவுண்ட்க்கு பணம் செட்டிலாகியது.. இந்த செய்தி விவசாயிகள் மூலம் மற்ற விவசாயிகளுக்கு பரவ கொஞ்சம் கொஞ்சமாக விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை இங்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர்..

அதே நேரத்தில் வெங்கடேஷ் அவர்கள் பல வியபாரிகளிடம் பேசி யார் நல்ல விலை தருகிறார்களோ அவர்களுக்கு அப்பொருளை விவசாயிகளிடமிருந்து பெற்று தந்து வருகிறார்… இப்படி ஒன்றுமே இல்லாமல் இருந்த இடத்தில் இன்று 3500 விவசாயிகளும் 2500 வியாபாரிகளிம் இவருடன் தொடர்பில் உள்ளனர்…

சென்னைக்கு போகும் ஒரு பொருள் விவசாயிடம் 85 க்கு பெற்று வியபாரி கைக்கு 100 க்கு சென்றால் இவரிடம் வரும்போது விவசாயிகளிடம் 90 க்கு வாங்கி வியபாரிக்கு செலவுடன் சேர்த்து 95 க்கு கிடைக்கிறது.. மியூச்சலாக விவசாயிக்கும் 5 ரூபாய் இலாபம்… வியபாரிக்கும் 5 ரூபாய் செலவு குறைவு.. இப்படி விவசாயிகளுக்கும் வியபாரிகளுக்கும் பெரும் பாலமாக செயல்படுகிறார்..

விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்கும் வியபாரிகளை கண்டடைவது, அதேப் போல வியாபாரிகளுக்கும் அவர்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் கிடைக்கச் செய்வதோடு, இவரே லாரியைப் பிடித்து, லோடு மேன்களை பிடித்து, வே ப்ரிட்ஜில் எடைப் போற்று வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பதால் அவர்கள் நேரடியாக வருவதே இல்லை… வரத் தேவையும் இல்லை… அந்த செலவும், நேரமும் குறைவதால் மற்ற இடங்களை விட 2 ரூபாய் கூடுதலாக கொடுத்து பொருட்கள் வாங்க வியபாரிகள் தயாராக உள்ளனர்.

அதே நேரத்தில் முன்பெல்லாம் விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பனை செய்த பணத்திற்கு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டும் ஆனால் இப்போது 48 மணி நேரத்தில் அவர்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது ஆதலால் விவசாயிகளும் மிக மகிழ்ச்சியாக இவரை நம்பி
பொருள் அனுப்புகின்றனர்..

திருமங்கலம் தாண்டி இவர் சேவையைப் பார்த்து, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, சிவகாசி, திண்டுக்கல், தூத்துக்குடி போன்ற பல மாவட்டங்களிலிருந்து இன்று பொருட்கள் வருகிறது… அதோடு மட்டுமன்றி வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் இவரைப் பற்றி அறிந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்து தர சொல்கிறார்கள் இவரும் வியபாரிகளிடம் பேசி நல்ல விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்து தருகிறார்…

ஓரிரு பொருட்களுடன் தொடங்கிய விற்பனை கூடம் 2 வருடத்திற்குள்ளே இவரின் முயற்சியில் 30 க்கும் மேற்பட்ட விளைப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக மாறியுள்ளது… தமிழ்நாட்டில் அதிகமான வகை விளைப் பொருட்களை விற்பனை செய்து சாதனை படைக்கும் இடமாக திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மாறியதற்கு பின்னால் வெங்கடேஷ் அவர்களின் தன்னலம் பாராத உழைப்பு உள்ளது…

இன்று ஆவாரம் பூ , நன்னாரி வேர், பெரண்டை போன்ற மூலிகை வகைகள் எல்லாம் இங்கு வருகிறது.. இந்த 2 வருடத்தில் 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.. தமிழ்நாடு மட்டுமன்றி கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து வந்தும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையானப்
பொருட்கள் வாங்கிச் செல்கின்றனர்..

இதுவரை இந்த இரண்டு வருட காலத்தில் மொத்தமாக 9 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளார்… இதற்காக இவர் விவசாயிகளிடமிருந்தோ வியபாரிகளிடமிருந்தோ ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை என்பதோடு சில நேரங்களில் தன் கைக்காசையும் செலவு செய்கிறார்..

எனக்கு அரசாங்கம் சம்பளம் தருது எனக்கு காசு, பணம் தேவை இல்லை, நான் என்னால முடிஞ்ச நல்ல விஷயங்கள் பன்றது மூலமா புண்ணியத்தை சேர்த்துக ஆசைப்பட்றேன் அவ்வளவே என்கிறார்…

திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வரும் விவசாயிகள் பொருட்கள் தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களுக்கும் போகனும் ஏற்றுமதி பண்ணணும் அதன் மூலம் விவசாயிகளுக்கு 5 ரூபாயாவது கூடுதலாக கிடைக்கனும் இதுதான் என் விருப்பம் அதுதான் என் இலக்கு என்கிறார்
வெங்கடேஷ்.

உழவர்களுக்காக இவரது அயராது உழைப்பை பாராட்டி உழவர்கள் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.