உழவர் விருதுகள் – 2022 – பரமேஸ்வரன்
761
post-template-default,single,single-post,postid-761,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2022 – பரமேஸ்வரன்

பரமேஸ்வரன்- பாரம்பரிய விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கம்

காரமடை வரி கத்தரி, குளத்தூர் வெள்ளை கத்தரி, எலவம்பாடி முள் கத்தரி என கத்தரியில் மட்டும் நம்மிடம் 500க்கும் மேற்பட்ட நாட்டுரகங்கள் இருந்துள்ளன. எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு கம்பெனி விதைகளை வாங்கி பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த அவல நிலையை மாற்றி மீண்டும் நம் பாரம்பரிய விதைகளை பரவலாக்குவதற்காக இந்தியா முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள  ஐ.வாடிபட்டியைச் சேர்ந்த  பரமேஸ்வரன் கடந்த ஆறு வருட உழைப்பில் காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், மரங்கள் என  300க்கும் மேற்பட்ட  அரிய மரபு விதைகளைச் சேகரித்து பரவலாக்கியுள்ளார்.

நண்பரொருவர் பாரம்பரிய விதைகள் பற்றிய ஆர்வத்தைத்தூண்ட ஊர் ஊராக அலைந்து திரிந்த பரமேஸ்வரனுக்கு, சந்திரசேகரன் என்ற மூத்த விவசாயி 20 விதமான பாரம்பரிய விதைகளை அள்ளித்தந்திருக்கிறார். அதன்பிறகு, அதுவே பரமேஸ்வரனின் வாழ்க்கையாகிப்போனது.

சேகரிக்கும் விதைகளை தன் தோட்டத்தில் பயிரிட்டு அறுவடை செய்து சேமித்தார். கேட்போருக்குக் கொடுத்தும் கொடுப்போரிடம் வாங்கியும் விதைகளை பரவலாக்கினார். 50க்கும் மேற்பட்ட கத்தரி ரகங்கள், 15க்கும் மேற்பட்ட வெண்டை ரகங்கள்,  50க்கும் மேற்பட்ட சுரைக்காய் ரகங்கள், வழக்கொழிந்துபோன  மூக்குத்தி அவரை, சிறகு அவரை என பல அபூர்வ விதைகள் பரமேஸ்வரனிடம் இருக்கின்றன. ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தது 1000 விவசாயிகளுக்கேனும் நாட்டு விதைகளைப் பகிர்ந்துகொள்கிறார் பரமேஸ்வரன்.

பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு வங்கியொன்று தொடங்கும் கனவோடு பயணித்திவரும் பரமேஸ்வரனின் கரம்பற்றிப் பாராட்டி பாரம்பரிய விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கத்திற்கான உழவர் விருதும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

No Comments

Post A Comment