உழவர் விருதுகள் – 2022 – கார்த்திகேயன்
766
post-template-default,single,single-post,postid-766,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2022 – கார்த்திகேயன்

சிருஷ்டி பவுண்டேஷன் – வேளாண் சிறப்பு விருது

மன வளர்ச்சி குன்றியவர்களை இந்த சமூகமும் குடும்ப அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் நிலைதான் இப்போதும் இருக்கிறது. அப்படி புறக்கணிக்கப்படுபவர்களை அரவணைத்து தோள்கொடுக்கிறார் கார்த்திகேயன். 15 ஆண்டுகளாக மன வளர்ச்சி குன்றியோர் மத்தியில் பணியாற்றியுள்ள கார்த்திக், அவர்களின் உளவியலை முழுமையாக புரிந்து வைத்திருக்கிறார். வேலையின்மையும் இயலாமையும் புறக்கணிப்புமே அவர்களின் கோபத்தையும் வேகத்தையும் தூண்டுகிறது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, கார்த்திக் எடுத்த முயற்சி பெரும் மாற்றத்துக்கு விதையாகியிருக்கிறது. 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகிலுள்ள குணமங்கலம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் ஒரு வேளாண் பண்ணையையும் சிறப்புப் பள்ளியொன்றையும் உருவாக்கியுள்ளார் கார்த்திக். மனநலம் பாதிக்கப்பட்ட 50 பேரின் வாழ்க்கையை இந்த பண்ணையும் பள்ளியும் வண்ணமாக்கியிருக்கிறது. சிருஷ்டி பவுண்டேஷன் நடத்தும் இந்தச் சிறப்புப்பள்ளியில் வாழ்க்கைக்கல்வியோடு வேளாண் கல்வியும் போதிக்கப்படுகிறது.

தங்கள் உணவுக்கு தேவையான நஞ்சில்லாக் காய்கறிகளை தங்கள் பண்ணையில் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள் இந்தப்பள்ளியின் மாணவர்கள். மாடு மேய்ப்பது, பால் கறப்பது, நெய்யாக்கி தருவது எல்லாமும் அவர்கள்தான்.

இந்தப்பணியை செவ்வனே செய்யும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களோடு மாடுகளை வாங்கித்தந்து, தோட்டங்களை உருவாக்கித்தந்து குடும்பத்தோடு இணைக்கிறார் கார்த்திகேயன்.

தங்கள் இருப்பு சிறிதும் சூழலைப் பாதிக்கப்படக்கூடாது என்ற சூழலியல் கல்வியையும் படிக்கிறார்கள் இங்குள்ள மாணவர்கள். சூரிய ஒளியில் மின்சாரம் பெற்றுக்கொள்வதோடு மாட்டுச்சாணத்தை எரிவாயுவாக்கி சமைக்கவும் பழகியிருக்கிறார்கள்.

சமூகம் கைவிட்டவர்களை தேடிப்பிடித்து அரவணைத்து பிறருக்குப் பாடமாக வாழச்செய்திருக்கும் கார்த்திகேயனையும் அவர் நடத்தும் சிருஷ்டி பவுண்டேஷனையும் பாராட்டி  வேளாண் சிறப்பு விருதுக்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

No Comments

Post A Comment