உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2024 / 10.02.2024
நீர் நிலைகள் சீரமைத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்பு – சித்ரவேல்….
சித்ரவேல் அடிப்படையில் ஊடகவியலாளர்..புதிய தலைமுறை செய்தி சேனலில் நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சியின் முன்னாள் தயாரிப்பாளர்.. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதம் ஒரு பணி செய்கிறார். நீர் நிலைகள் சீரமைத்தல், மரக் கன்றுகள் நடுதல், ஊர் சுத்தம் செய்தல் இப்படி பல கட்ட பணிகளை தன்னார்வர்களையும், மாணவர்களையும் வைத்து செய்கிறார்…இதன் மூலம் நீர் நிலைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிவு கிட்டுகிறது.. பிறகு 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் தன் பைக் பஞ்சர் ஆகி நிற்க, அந்த ஊரில் தன் அண்ணனின் நண்பர் ஒருவர் வந்து உதவி செய்ததோடு அவர் வீட்டிற்கும் அழைத்துச் செல்கிறார்.. அந்த ஊரில் நூற்றுக்கணக்கான மக்கள் குளத்தில் நீர் கொண்டு செல்வதை கவனிக்கிறார். காஞ்சிபுரம் பக்கம் இப்போதும் குளத்தில் நீர் எடுத்து செல்கிறார்களே இவருக்கு ஆச்சரியம்… அதைப் பற்றி...