உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025
நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு – திருமிகு. சியாமளா
மாரி யல்லது காரியமில்லை இவ்வுலகில். . அதுவும் உழுதொழிலுக்கு நீர் என்பது உடலில் ஓடும் குருதியை போல. . அதை உணர்ந்தே நம் முன்னோர்கள் வழிந்தோடி கடல் கடக்கும் நீரை, ஏரி, குளம், குட்டை , கண்மாய் என அனைத்து வழிகளிலும் சேமித்து உழவுக்கு உயிர் ஊட்டி வந்தனர். ஆனால் இன்றோ வேர்களை வெட்டிய மரமாய் நீர் வழித்தடத்தை இழந்த பல ஏரி குளங்கள் உயிரற்ற சடலாமாய் கிடக்கின்றன. நதியை பெண்னோடு ஒப்பிடுவர், மழையை பெண்ணுக்கு உவமையாக்குவர், நீருக்கும் பெண்ணுக்குமான தொடர்பு தொப்புள் கொடி உறவு, பிள்ளை பசியைக் கண்டு பொறுக்காத தாய் போல வறண்டு கிடந்த நீர்நிலைகள் கண்டு அதை மீட்டெடுக்க எண்ணி, அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து, 30 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இன்று மீண்டும் உயிர் பெற்று விவசாயம் வளம் பெற...