சிறந்த பெண் வேளாண் தொழில் முனைவோர் – திருமிகு.  சுகந்தி
-1
archive,tag,tag-39,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

வாழை குலை தள்ளிய பின் பயனற்று மண் தின்று போகும் வாழை, அப்படிப்பட்ட அந்த வாழையைக் கொண்டே பல பெண்களின் வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக் காட்டியிருக்கிறார் நாமக்கல் மோகனூரைச் சேர்ந்த தொழில் முனைவோர் சுகந்தி. திருமணம் என்ற தடையால் தன் படிப்புக் கனவை தொலைத்த பல கோடி தமிழ்ப்பெண்களுள் சுகந்தியும் ஒருவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடனே பிடிக்காத திருமணம். ஆனால் அதோடு தன் வாழ்வு முடிந்துவிட்டது என வீட்டில் முடங்கவில்லை. தன் தடைகளை தகர்த்தெறிய வேண்டும் என்றால் கல்வி மட்டுமே ஒரே தீர்வு என முடிவு செய்து படிப்பை தொடர்ந்தார். தொலை தூர கல்வி மூலம் BA முடித்து அதோடு நின்றுவிடாமல் MA பட்டமும் பெற்றார். கல்வி ஒருவருக்கு அறிவை மட்டும் கொடுப்பதில்லை அகத்தை திறந்து சமூகத்தை அக்கறையோடு பார்க்கும் மனதையும் கொடுகிறது. தன் வாழ்வில் கஷ்டங்களையும் சிரமங்களையும், பிடிக்காத...