சிறந்த பெண்கள் வேளாண் கூட்டமைப்பு – நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு
-1
archive,tag,tag-36,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 13.02.2025

தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கபடும் மாவட்டங்களில் முதலில் முந்தி இருப்பது பெரம்பலூர் மாவட்டம். அதிலும் பின்தங்கி ஒடுங்கி போன ஒரு ஒன்றியம் எப்படி இருக்கும், காணும் இடமெல்லாம் மானாவாரி காடுகளே அதிகம். முறையற்ற காலநிலையும், நவீன ரக வேளாண்மையின் செலவினங்களும் வேப்பூர் பகுதி விவசாயத்தின் முதுகெழும்பையே முறித்துப் போட்டது. அந்நிலையை மாற்ற பெரம்பலூரின் முந்தைய தலைமுறையின் விவசாயமான சிறுதானிய பயிரிடலை கையில் எடுத்து, வறுமையின் பிடியில் இருந்து பெரம்பலூர் விவசாயிகளை மீட்டுள்ளனர் நம்மாழ்வார் இயற்கை சிறுதானிய உழவர் உற்பத்தியாளர் குழு. பெரம்பலூர் மானாவரி காடுகளில் மக்காச்சோளமும், PT ரக பருத்தியையும் பயிரிட்டு, மருந்தடித்து மருந்தடித்தே நொந்து போனவர்கள் அப்பகுதி விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு மருந்தின் அதீத விஷதன்மையால் 5 அப்பாவி விவசயிகள் உயிர் பறி போன பின்தான் விவசாயிகளுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய ஆபத்து...