கால்நடைத் துறையில் சிறந்த பங்களிப்பு – கால்நடை மருத்துவர். திருமிகு. விஜயகுமார்
-1
archive,tag,tag-40,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive
உழவர் விருதுகள், உழவர் விருதுகள் – 2025 / 12.02.2025

உழவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது கால்நடை வளர்ப்பு… அவர்கள் நொடிந்து ஒடிந்துவிடாத படி, தாங்கிப் பிடிக்கும் உயிருள்ள ஊன்றுகோல்கள் தான் ஆடு மாடு கோழிகள். பட்டி ஆடுகளும் பால் கறவை மாடுகளும் தான் இன்று பல உழவர் குடும்பங்களை பசியாற செய்து கொண்டுள்ளன. கால்நடைகளுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த உழவர் குடும்பமே நொடிந்து போகும். அப்படிப்பட்ட சூழலில் அலைக்கும் அபயகுரல்களுக்கு இரவு பகல் பாராமல் ஓடி வந்து மருத்துவ உதவி செய்து உழவருக்கு உறுதுணையாய் இருந்து வருபர் தான் கால்நடை மருத்துவர் விஜயகுமார். 35 வருடகால மருத்துவப்பணியில் அவர் தனது குடும்பத்தோடு செலவிட்ட நேரத்தை விட கால்நடைகளோடு செலவிட்ட நேரேமே அதிகம். காட்சிக்கு எளியவர், கடும் செல்லை தவிர்ப்பவர் , இல்லாதவருக்கு இயன்றதை செய்யும் ஈகை குணத்தவர் என அவரை 30 வருடங்கள் அருகில்...