உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆலோசனைக்குழு வழிகாட்டுதலின்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தகுதியும் திறமையும் இருந்தும் ஊடக வெளிச்சம் இல்லாத ஐந்து விவசாயிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு விருதும் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உழவர் விருதுகள் வழங்கும் விழாவானது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்றது. இதில் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனர் கார்த்தி, அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர் நடிகர் சூர்யா, ஓவியர் மற்றும் நடிகர் சிவக்குமார், இயக்குனர் பாண்டிராஜ், சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, நடிகர் பசுபதி, உழவன் ஃபவுண்டேஷனின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டனர். நடிகர் சூர்யா அவர்கள் உழவர்களின் முன்னேற்றத்திற்காக உழவன் ஃபவுண்டேஷனுக்கு முதல் நன்கொடையாக 1 கோடி ரூபாயை வழங்கினார்.
அதையடுத்து சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி அவர்கள் விவசாயத்திற்காக நடிகர் கார்த்தி எடுத்திருக்கும் முயற்ச்சிகளைப் பாராட்டி, உழவன் ஃபவுண்டேஷனுக்கு நன்கொடையாக ரூபாய் 25 இலட்சத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விவசாயிகள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் தங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை வல்லுநர்குழுவிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.
நடிகர் கார்த்தி அவர்கள் “உழவன் ஃபவுண்டேஷன் எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களை கௌரவப்படுத்தி அங்கீகரிக்கும் அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் விவசாயத்தின் அவசியத்தை புரிந்து கொண்டுள்ளார்கள் அவர்களுக்கும் எப்போதும் உழவன் ஃபவுண்டேஷன் உறுதுணையாக இருக்கும்” என்றார்.
“சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதன் முக்கியத்துவத்தை மக்களுக்குக் கொண்டுச் செல்வதோடு, உழவின் மீதும் உழவர்களின் மீதும் சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை அங்கீகரித்து, கெளரவப்படுத்தி தற்சார்பு பொருளாதார தன்னிறைவுப் பெற்றவர்களாக உருவாக்குவதன் மூலம் இளைஞர்களை நிலம் நோக்கி வரவழைத்தல்”.
பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் | மண்ணியல் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர் |
பாமயன் | இயற்கை வேளாண் வல்லுநர் மற்றும் சூழலியலாளர் |
கு-சிவராமன் | சித்த மருத்துவர் மற்றும் சூழலியலாளர் |
OFM அனந்து | ஒருங்கிணைப்பாளர், பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு. |
நீ. செல்வம் | பூச்சியியல் வல்லுநர் |
Contact – uzhavanfdn@gmail.com
நன்கொடை அளிக்க விரும்பும் நல் உள்ளங்கள் முதலில் 7550055333 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ உறுதிச் செய்துகொண்டப் பிறகு நன்கொடையை அளிக்கவும்.
வெளிநாட்டில் வசித்துக் கொண்டு இந்திய வங்கி கிளையிலிருந்து 5000 ரூபாய்க்கு மேல் அனுப்புபவர்கள் தங்கள் PAN மற்றும் Passport Scanned copy யை uzhavanfdn@gmail.com என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு 7550055333 என்ற எண்ணையோ அல்லது uzhavanfdn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளவும்.