செயல்பாடுகள்
396
page-template-default,page,page-id-396,bridge-core-1.0.5,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-18.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-6.0.2,vc_responsive

செயல்பாடுகள்

சேவைக்கான ஊக்கத்தொகை - முனைவர் தேபல் தேப் மற்றும் நண்பர்கள்

முனைவர் தேபல் தேப், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இதுவரை 1400 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து அதை உழவர்களுக்கும் வழங்கி வருகிறார். அவருடைய சேவையைப் பாராட்டி, கொரானா காலத்தில் அவருடைய ஆய்வுகள் தொடர்ந்து நடைப் பெற ரூபாய் 2 லட்சம் ஊக்கத்தொகையாக 18.09.2020 அன்று அளிக்கப்பட்டது.

ஏரி சீரமைப்பு - திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ள தனக்கர் குளம் பஞ்சாயத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வீசாடி குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி 22.09.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு 05.10.2020 அன்று முடிக்கப்பட்டது.

வீசாடி குளம் சீரமைப்புக்கு முன்

வீசாடி குளம் சீரமைப்புக்கு பின்

சேவைக்கான உதவி - மரக்கன்றுகள் நட துளையிடும் கருவி

பல ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் மதுரையைச் சேர்ந்த தமிழ்வனம் அமைப்பிற்கு மரக்கன்றுகள் நடுவதற்கு உதவியாக துளையிடும் கருவி ரூபாய் 22,819 செலவில் 13.10.2020 அன்று வாங்கியளிக்கப்பட்டது.

நலிவடைந்த குடும்பத்தைச் சேர்ந்த வேளாண் கல்லூரி மாணவிக்கு கல்லூரி கட்டணம்

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளியின் மகளான லெட்சுமி பிரியா அவர்கள், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி திருச்சியில் பயின்று வருகிறார்..

 

கொரானா காலக்கட்டத்தில் அவருடைய கல்வி கட்டணத்தை கட்டும் நிலையில் பொருளாதாரச் சூழல் இல்லை. இம்மாணவியின் நிலையைக் கருத்தில் கொண்டு மூன்றாவது செமஸ்டருக்கான கல்விக் கட்டணம் ரூபாய் 16, 100, 09.10.2020 அன்று செலுத்தப்பட்டது.

நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உதவி

ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை மீட்டெடுக்க 40 உழவர்களுக்கு 50 கிலோ வீதம் ரூபாய் ஒரு லட்சம் செலவில் வேப்பம் புண்ணாக்கு 24.02.2021 அன்று வழங்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவாசயக் குடும்ப மாணவர்களுக்கு உதவித் தொகை

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகள் முழுவதையும் இழந்து தவித்த, நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியைச் சேர்ந்த ஆப்ரின் பேகம் என்ற மாணவியின் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் 20.12.2018 அன்று  ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சிந்துஜா என்ற மாணவி குடும்பத்தின் மொத்த உடைமைகளும் கஜா புயலால் பறிபோனது. இம்மாணவியின் குடும்பத்தின் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் 04.01.2019 அன்று ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட உழவர்களுக்கு உழவர் விருதுகள்

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தகுதியுள்ள அதே சமயம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  ஐந்து பேரைக்  கண்டறிந்து அவர்களுக்கு 08.01.2019 அன்று உழவர் விருதும் 1,00,000 ற்க்கான காசோலையும் வழங்கி கௌரப்படுத்தப்பட்டது.

சேவைக்கான ஊக்கத்தொகை - மரம் கருணாநிதி

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சி, சங்கீதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் கருணாநிதி. அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

 

சிறுவயதிலிருந்தே இயற்கையை நேசிப்பதோடு அதன் பாதுகாப்புக்காக மரக்கன்றுகள் நடுவதையும் தொடங்கியவர். மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், மற்றவர்களுக்கு மரக் கன்றுகளை இலவசமாக அளிக்கவும் தன் சம்பளம் முழுவதையும் செலவு செய்பவர். இதுவரை 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டும் மற்றவர்களுக்கு வழங்கியும் வருகிறார்.

 

“மனுஷனா பொறந்தா எதாவது நல்ல விஷயமா இந்த சமூகத்திற்கு செஞ்சிட்டு போகனும்” என்கிறார்…
இவரின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி அவருக்கு ஊக்கத்தொகையாக 14-04-2019 ரூபாய் 50,000 த்திற்கான காசோலை வழங்கி கெளரவிக்கப்பட்டது.

ஏரி சீரமைப்பு - திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தில் உள்ள விண்ணமலை ஏரி கடந்த 20 வருடங்களாக பராமரிப்பின்றி சீமைகருவேல மரங்களால் நிரம்பியிருந்தது.

 

இந்த ஏரியை சீரமைப்பதன் மூலம் 1500 ஏக்கர் நிலம் பாசன வசதியும், 7 கிராமங்களில் உள்ள 4500 குடும்பங்கள் குடிநீர் வசதியும் பெறும் என தெரியவந்தது.

 

இவ்ஏரியை சீரமைக்கும் பணி ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்களால் 15.09.2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. 25/03/2020 விண்ணமலை எரி சீரமைக்கப்பட்டு வேலை முடிக்கப்பட்டது.

மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு - மறைமலைநகர்

தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பியுள்ள மறைமலைநகரில் காற்று மாசுபாடுகளை குறைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன், 500 க்கும் மேற்பட்ட மகிழம், வேம்பு, புங்கன், பாதாம், நாவல், நாகலிங்கம், மருதம் போன்ற மரக்கன்றுகள் 01.10.2019 அன்று நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது..

வாய்க்கால் சீரமைப்பு - திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் பணகுடி மற்றும் காவல் கிணறு ஊராட்சி பகுதிகளுக்கு மிக முக்கியமான நீராதாரமாக விளங்குவது மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கிழக்கு நோக்கி பாயும் சூறாவளி ஓடை.

 

இச்சூறாவளி ஓடையானது மொத்தமாக 13 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இதன் மூலம் சிவகாமி புதுகுளம், மியாபுதுகுளம், லெப்பை குடியிருப்பு காளி புதுகுளம், லெப்பை குடியிருப்பு பெரிய புதுகுளம், புஞ்சைகட்டி குளம், விநாயகர் புதுகுளம் போன்ற 8 ஏரிகளுக்கு நீர்வரத்து செல்கிறது. இந்த ஏரியின் மூலம் 10,000 த்திற்க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

 

சூறாவளி வாய்க்கால் ஆம்பினால் ஆம்னி கனெக்ட் தொழிற்சாலை பங்களிப்புடன் 28.08.2020 சீரமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு 14.09.2020 அன்று முடிக்கப்பட்டது.