செயல்பாடுகள் 2
545
page-template-default,page,page-id-545,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

செயல்பாடுகள்

மரம் கருணாநிதி

மரம் கருணாநிதி அவர்கள் இதுவரை ஏழு இலட்சம் மரக்கன்றுகளுக்கு மேல் மக்களுக்கு இலவசமாக அளித்தும், சாலை ஓரங்களில் நட்டு பராமரித்தும் வருகிறார். அரசுப் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவர் தன் சம்பளத்தை மரக்கன்றுகளுகாகவே செலவழித்து வருகிறார். இவரின் மகத்தான சேவையைப் பாராட்டி ரூபாய் 50,000 த்திற்கான காசோலை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையத்தில் 83 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள  விண்ணமலை  ஏரியை சீரமைக்கும் பணியானது 02.08.2019 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் கிராமத்தில் உள்ள 103 ஏக்கர் விண்ணமலை ஏரியின் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்களும், ஏழு கிராமங்களைச் சார்ந்த 4000 குடும்பங்களும் பயன்பெறுகிறது. இந்த ஏரி கடந்த 20 வருடங்களாக பராமரிப்பு இல்லாமல் சீமைகருவேல மரங்களால் நிரம்பிருந்தது. இதை ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் 14-08-2019 அன்று சீரமைக்க ஆரம்பிக்கப்பட்டு 25-03-2020 அன்று முடிக்கப்பட்டது

மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு

தொழிற்சாலைகள் அதிகமுள்ள மறைமலை நகர் நகராட்சி தெருக்களில் ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் 500 க்கும் மேற்பட்ட நாட்டு மரக்கன்றுகள் 01.10.2019 அன்று நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் உள்ள சூறாவளி ஓடையின் மூலம் அங்குள்ள 8 ஏரிகளுக்கு நீர்வரத்து செல்கிறது. இந்த ஏரியின் பல ஆயிரம் விவசாய நிலங்களும் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயன்பெறுகிறார்கள். 13 கிலோ மீட்டர் நீளமுள்ள இக்கால்வாயை ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் சீரமைக்கும் பணி 27-08-2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு 15-09-2020 அன்று முடிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் உடமைகள் முழுவதையும் இழந்து தவித்த, நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியைச் சேர்ந்த ஆப்ரின் பேகம் என்ற மாணவியின் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் 20.12.2018 அன்று  ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சிந்துஜா என்ற மாணவி குடும்பத்தின் மொத்த உடைமைகளும் கஜா புயலால் பறிபோனது. இம்மாணவியின் குடும்பத்தின் மறுசீரமைப்புக்கு உதவும் வகையில் 04.01.2019 அன்று ரூபாய் 20,000 வழங்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம்

டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து தகுதியுள்ள அதே சமயம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  ஐந்து பேரைக்  கண்டறிந்து அவர்களுக்கு 08.01.2019 அன்று உழவர் விருதும் 1,00,000 ற்க்கான காசோலையும் வழங்கி கௌரப்படுத்தப்பட்டது.